ஆன்லைன் ஜாப் மூலம் சம்பாதிக்க முடியுமா....?


நமது நகரங்களிலும் கிராமங்களிலும் எப்படி அவரவர்களின் படிப்பு, திறமைமை மற்றும் அனுபவத்திற்கு தகுந்த வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றனவோ அதேபோல்தான் ஆன்லைனிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நாம் சரியான வேலையை தேர்ந்தெடுக்காததுதான் நமது தோல்விக்கான முக்கியமான காரணம்.

பகல் கனவுகள்

கிராமங்களில் நகரங்களில் கிடைக்கும் வேலைகளாக இருந்தாலும் சரி ஆன்லைனில் கிடைக்கும் வேலைகளாக இருந்தாலும் சரி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே நன்றாக சம்பாதிக்க முடியும். ஆன்லைன் என்றால் கஷ்டப்பட்டு உழைக்காமல் ஈமெயில் படித்தோ அல்லது காப்பி பேஸ்ட் செய்தோ அல்லது விளம்பரங்களை கிளிக் செய்தோ மாதம் பத்தாயிரம் இருபதாயிரம் சம்பாதிக்கலாம் என்ற பகல் கனவிலிருந்து வெளியே வரவேண்டும்.

ஈமெயில் படித்தோ அல்லது காப்பி பேஸ்ட் செய்தோ அல்லது விளம்பரங்களை கிளிக் செய்தோ சம்பாதிக்க முடியாது என்று சொல்லவில்லை. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மாதம் இருநூறு முன்னூறு என்று மிகவும் சொற்பமாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வகையான வேலைகளும் மிக மிக எளிதான வேலைகள் தானே. அதனால் உங்கள் மூலம் ஒரு நிறுவனத்திற்கு வரும் இலாபத்தை பொருத்துதானே உங்களுக்கும் வருமானம் கிடைக்கும்.

நீங்கள் ஒரு நிறுவனம் வைத்துள்ளீர்கள் என்றால் எந்த வேலையும் செய்யாத ஒருவருக்கு மாதம் இருபதாயிரம் கொடுப்பீர்களா என்று பிராக்டிக்கல் ஆக எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆன்லைனில் சம்பாதிக்க என்னதான் வழி?

ஆன்லைனில் நிறைய சம்பாதிக்க என்ன என்ன வழிகள் உள்ளன என்பனவற்றை நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன். அதற்கான இணைப்பு இதோ --->> ஆன்லைனில் சம்பாதிக்க வழி

என்னைப்பொறுத்தவரையில் நீங்கள் ஏற்கனவே ஒரு தொழில் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றால், ஆன்லைன் ஜாப் தேடி வீணடிக்கும் நேரத்தில் தற்பொழுது நீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலை இன்னும் ஒருபடி மேலே கொண்டுசெல்வது என்பதை பற்றி யோசித்து தொழிலை முன்னேற்றும் வழிகளை கண்டுபிடியுங்கள். தொழிலை எப்படி முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வது என்பது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள கட்டுரைகளில் சில உங்களின் பார்வைக்கு.

--->> தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவது எப்படி?
--->> செய்யும் தொழிலும் வெப்சைட்டுகளும்

Tags : Home Based Online Works In Tamil Nadu, Home Based Part Time Jobs In Tamil Nadu, The Best Online Home Based Jobs In Tamil Nadu

Post a Comment

1 Comments