நாமும் நாம் தற்போது செய்துகொண்டிருக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்றால் காலத்திற்கு தகுந்தாற்போல் நம்மை நாம் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அந்தக்காலத்து வழிமுறைகள் இந்த காலத்திற்கு ஒத்துவராது. ஏனென்றால் அந்தக்காலத்தில் போட்டிகள் மிகமிகக்குறைவு. ஆனால் தற்போது அப்படியில்லை எந்தவொரு தொழிலை எடுத்தாலும் அதிக அளவிலான போட்டியாளர்கள் உள்ளனர். நாம் நமதுபோட்டியாளர்களைவிட ஒருபடி மேலே சென்றால் மட்டுமே தொழிலில் முன்னேற்றம் என்பதனை காண முடியும்.
அந்த ஒருபடிதான் என்னவென்று இப்போது நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
பெருசா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. இன்டர்நெட் என்பது வெகு வேகமாக வளர்ந்துவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்டர்நெட் வளர்வதற்கும் நமது தொழிலை வளர்த்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இருக்கிறது நண்பர்களே....! இண்டர்நெட்டினை உபயோகம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்தான் அது வெகுவேகமாக வளர்கிறது. தற்போது ஒரு நிறுவனம் எடுத்துள்ள சர்வேயின்படி உலகில் பத்தில் இருவர் இன்டர்நெட்டினை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இன்டர்நெட் என்றாலே வெப்சைட்டுகள்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நீங்களே பார்த்திருப்பீர்கள் நிறைய நிறுவனங்களும் கடைகளும் அவர்களுக்கென்று வெப்சைட் ஒன்றினை அமைத்து அதில் அவர்களது அனைத்து தயாரிப்புகளைப்பற்றியும் விவரமாக போட்டிருப்பார். மக்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை உள்பட அனைத்து விவரங்களையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்வர். வேண்டும் பொருளை கம்ப்யூட்டர் மூலமாக ஆர்டர் செய்தே பெற்றுக்கொள்கின்றனர். இதனால் மக்களின் அலைச்சலும் நேரமும் மிச்சமாகிறது.
உதாரணமாக, நீங்கள் சென்னையில் வசிக்கிறீர்கள் உங்களுக்கே ஒரு Dell Laptop வாங்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இன்டர்நெட் வளர்ச்சியடையாத காலமாக இருந்திருந்தால் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை சும்மா “Dell Laptops in Chennai” என்று Google இல் சர்ச் பண்ணினால் சென்னையில் Dell Laptop எந்த எந்த கடைகளில் கிடைக்குமோ அவர்களின் வெப்சைட்டுகள் வரிசையாக வந்து நிற்கும். நீங்கள் எங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே Dell Laptop கிடைக்கும் இடங்களை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கடைக்கும் உள்ள விலை வித்தியாசங்களையும் அறிந்து கொண்டு உங்களால் சரியான இடத்தில் குறைந்த விலையில் Dell Laptop வாங்கமுடியும்.
இப்போது அனைவரின் வீட்டிலும் கம்பியூட்டரும் இண்டர்நெட்டும் , தொலைக்காட்சியையும் கேபிள் கனெக்சனையும் போல் பெருகிவருகிறது. இந்த சமயத்தில்தான் நீங்களும் சுதாரித்துக்கொள்ளவேண்டும் நண்பர்களே. இலட்சகணக்கில் செலவுசெய்து தொழிலை ஆரம்பித்துவிட்டு அதற்கு வெப்சைட் ஆரம்பிக்க வெறும் ஐயாயிரம் செலவுசெய்ய யோசிப்பது உங்களின் முன்னேற்றத்தை தடை செய்வதாகவே அமையும்.
எங்கு சென்று வெப்சைட் ஆரம்பிப்பது என்று இப்போது நினைக்கிறீர்களா. கவலையே வேண்டாம் நாங்களே உங்களுக்கு சிறந்த முறையில் நீங்கள் செய்யும் தொழிலுக்குத் தகுந்தவாறு ஒரு வெப்சைட்டினை அமைத்துத் தருகின்றோம். மற்றும் நாங்களே உங்களின் வெப்சைட்டை பராமரித்தும் கொள்வோம்.
வெப்சைட்டிற்கு ஆகும் செலவு,
Domain Name - Rs.569/Year
Web Hosting - Rs.999/Year
Web Designing - Rs.3450/One Time
மொத்த செலவு - Rs.5000
உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : +91 9486854880
வெப்சைட் : www.zolahost.com
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.