யூடியூப்
யூடியூப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. அந்த அளவுக்கு நம் அனைவருக்கும் அறிமுகமான ஒன்றுதான் யூடியூப்.யூடியூப் வழியாக சம்பாதிக்க முடியுமா?
யூடியூப் மூலம் சம்பாதிக்க முடியுமா என்கிற கேள்விக்கு, நிச்சயமாக ஆம் என்பதுதான் பதில்.
யூடியூப் மூலம் எவ்வளவு சம்பாதிக்க்க முடியும்?
சில ஆயிரங்களில் ஆரம்பித்து பல இலட்சங்களில் யூடியூப் மூலம் சம்பாதித்துக்கொண்டுள்ளனர்.
யூடியூப்பில் வீடியோ தானே வரும் அதில் எப்படி வருமானம்?
இதுவே பலரின் கேள்வி. நாம் அனைவருமே யூடியூப்பில் தினமும் வீடியோ பார்ப்பவர்கள்தான். நாம் பார்க்கும் வீடியோக்களின் இடையே விளம்பரங்கள் வருவதை பார்த்திருப்போம்.
அந்த விளம்பரங்களின் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியினை யூடியூப் நிறுவனம் வீடியோவின் உரிமையாளருக்கு வழங்குகின்றது. அதன்காரணமாகவே பலர் யூடியூப்பில் வீடியோ பப்ளிஷ் செய்வதை மட்டுமே முழுநேர தொழிலாக செய்துகொண்டுள்ளனர்.
உதாரணத்திற்கு சில பிரபலமான தமிழ் யூடியூப் சேனல்களை பார்ப்போம்,
சினிமா விமர்சனம்
மருத்துவ குறிப்புகள்
சமையல் குறிப்புகள்
தொழில்நுட்பம்
இவர்களை போல இன்னும் நிறைய சேனல்கள் தமிழிலேயே உள்ளது. உலகம் முழுவதிலும் பல இலச்சக்கணக்கானோர் யூடியூப் மூலம் சம்பாதித்துக்கொண்டுள்ளனர்.உங்களாலும் இவர்களைப்போல் வீடியோக்களை தரமுடியும் என்றால் உங்களாலும் நிச்சயமாக யூடியூப் மூலம் சம்பாதிக்கமுடியும்.
எந்தமாதிரியான வீடியோக்கள் மூலம் சம்பாதிக்க முடியும்?
- எந்தமாதிரியான வீடியோக்கள் மூலம் வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும். நமது வீடியோவின் தரம்தான் முக்கியம்.
- வீடியோ நான்கு அல்லது மூன்று நிமிடத்திற்கு உள்ளாக இருக்கவேண்டும். அநேகம் பேர் அதிகநேரம் உள்ள வீடியோக்களை விரும்புவதில்லை.
- நாம் சொல்லவரும் விஷயம் தெளிவாக அனைவருக்கும் எளிதில் புரியும்படி இருக்கவேண்டும்.
எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது?
நாம் எந்த மாதிரியான விடீயோக்களை தரப்போகின்றோம் என்பதை முதலில் முடிவுசெய்து அதற்க்கு தகுந்தாற்போல் அனைவருக்கும் எளிதில் புரியும்படி ஒரு கவர்ச்சிகரமான பெயரினை தேர்வுசெய்யவேண்டும்.
நீங்கள் தேர்வுசெய்த பெயரில் கீழ்காணும் மூன்று விஷயங்களை முதலில் ஆரம்பிக்க வேண்டும்.
1.முதலில் நாம் தயார் செய்துவைத்திருக்கும் வீடியோக்களை யூடியூப்பில் அப்லோட் செய்யவேண்டும்.
2.பிறகு அந்த விடீயோவினை வெப்சைட்டில் ஷேர் செய்யவேண்டும்.
3.வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ள வெப் பேஜ் ஐ பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்யவேண்டும்.
யூடியூப் இல் சம்பாதிக்கும் லெவல் ஆக்டிவேட் செய்ய விதிமுறைகள்
- குறைந்தபட்சம் ஆயிரம் பேர் உங்களது சேனலை சப்ஸ்க்ரைப் செய்திருக்கவேண்டும்.
- குறைந்தபட்சம் 4000 மணி நேரங்கள் உங்கள் வீடியோக்கள் பார்க்கப்பட்டிருக்கவேண்டும்.
- கண்டிப்பாக அடுத்தவர்களின் வீடியோக்களை டவுன்லோடு செய்து பதிவேற்றம் செய்தல் கூடவே கூடாது.
50 வீடியோக்களாவது அப்லோட் செய்தால்தான் கொஞ்சம் முன்னேற்றம் தெரியும். ஏனென்றால் நாம் பதிவேற்றம் செய்யும் அணைத்து வீடியோக்களும் ஹிட் ஆகும் என்று சொல்லமுடியாது. ஒருசில வீடியோக்கள் மட்டுமே அதிகமான பார்வைகளை பெரும். அந்த ஓருசில வீடியோக்களின் வாயிலாக மற்ற வீடியோக்களும் கணிசமான பார்வைகளை பெற ஆரம்பித்துவிடும்.
மேலும் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் : tamilwebdesigns@gmail.com
பத்து வீடியோக்களாவது பதிவேற்றம் செய்துவிட்டு கீழ்கண்ட விபரங்களுடன் தொடர்புகொண்டால்மட்டுமே உதவ வசதியாக இருக்கும்.
- உங்களது யூடியூப் சேனல்
- உங்களது வெப்சைட்
- உங்களது பேஸ்புக் பேஜ்
0 Comments