அப்ளியேட் மார்கெட்டிங் மூலம் சம்பாதிப்பது எப்படி?


அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றொரு ஆன்லைன் வேலைவாய்ப்பு இருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் அவ்வளோ சம்பாதிக்கலாம் இவ்வளோ சம்பாதிக்கலாம், நாங்கள் பயிற்சி தருகின்றோம் என்பன போன்ற விளம்பரங்களையும் பார்த்து இருப்பீர்கள். பயிற்சி அளிப்பதாகக்கூறி பலர் ஏமாற்றி கொள்ளை அடிப்பதால் ஆன்லைன் ஜாப் என்றாலே மக்கள் தெறித்து ஓடுகின்றனர். ஆன்லைன் பொறுத்தவரையில் ஒவ்வொரு அசைவுமே காசுதான்.

எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டோடு இறங்கி செய்தால் மட்டுமே ஒரு நல்ல பலனை எதிர்பார்க்கமுடியும். அதை விடுத்து வெறும் பயிற்சியை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.

அப்ளியேட் மார்கெட்டிங் செய்தால் பணம் வரும் என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் ஆரம்பிக்காமல், அப்ளியேட் மார்கெட்டிங் என்றால் என்ன அதில் நமக்கு எதற்காக பணம் கொடுக்கின்றார்கள், நாம் செய்யப்போகும் வேலைதான் என்னவென்பதை முதலில் தெளிவாக புரிந்துகொண்டு வேலையை ஆரம்பித்தால் மட்டுமே அதில் வெற்றிபெற்று நாம் நினைத்தபடி பணம் ஈட்டமுடியும்.

அப்ளியேட் மார்கெட்டிங் என்றால் என்ன?

அப்ளியேட் மார்கெட்டிங் என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுகொடுப்பது ஆகும். உதாரணமாக, 1000 ரூபாய் மதிப்புடைய பொருளை நீங்கள் விற்று தருகின்றீர்கள் என்றால், உங்களுக்கு அந்த பொருளின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையினை கமிசனாக வழங்குவார். 1000 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு கமிசன் 10% என்றால் உங்களுக்கு கிடைக்கும் தொகை Rs.100 ரூபாய் ஆகும்.

அப்ளியேட் மார்கெட்டிங் செய்வது எப்படி?

இன்டர்நெட் மாபெரும் வளர்ச்சியடைந்து பட்டிதொட்டியெல்லாம் சென்றுவிட்ட இந்த காலத்தில் யார் பொருளை விற்க போகிறார்கள் அதை நாம் எப்படி விற்றுக்கொடுத்து கமிசன் வாங்குவது என்று எல்லாம் கவலை கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

Amazon, FlipKart, SnapDeal, Ebay மற்றும் இவை போன்ற பல நிறுவனங்கள் ஆன்லைனிலேயே பல இலட்சக்கணக்கான பொருட்களை தினமும் விற்றுவருகின்றனர். சமையல் பொருட்கள், பர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் (Mobile, TV, Audio Systems), வீட்டு உபயோகபொருட்கள் (Mixer, Grinder, Fridge, Washing Machine) என அனைத்து பொருட்களையும் ஆன்லைனிலேயே விற்று வருகின்றன.

நாம் இதுபோன்று ஆன்லைனில் விற்பனை செய்யும் இணையதளங்களில் அப்ளியேட் ஆக இணைந்து கொண்டால் நமக்கென்று ஒரு அப்ளியேட் ஐடி தருவார்கள். அந்த ஐடியை வைத்து அனைத்து பொருட்களுக்கும் அப்ளியேட் லிங்க் எடுத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம்.

நமது அப்ளியேட் லிங்க் மூலம் பொருட்களை வாங்கவைப்பது எப்படி?
ஒருவரை ஒரு பொருளை வாங்க வைக்கவேண்டும் என்றால் முதலில் அந்த பொருளை பற்றி அனைத்து விபரங்களையும் நிறைகளையும் குறைகளையும் அவருக்கு புரியவைக்கவேண்டும்.

Product Review, Product Comparison அடிப்படையாகக்கொண்டு இயங்கும் வெப்சைட்டுகளை பார்த்து இருப்பீர்கள். Product Review வெப்சைட்டுகளில் அனைத்து முக்கியமான பொருட்களைப்பற்றியும் அவற்றின் நிறைகுறைகளை பற்றியும் கொடுத்து இறுதியாக அவற்றை ஆன்லைனில் வாங்குவதற்கான Flipkart, Amazon, Snapdeal போன்ற தளங்களின் இணைப்புகளை கொடுத்து இருப்பர்.

Product Comparison வெப்சைட்டுகளில் ஒரே மாதிரியான இரு பொருள்களுக்கு இடையேயான வேறுபாடுகளையும் நிறைகுறைகளையும் ஒப்பிட்டு பட்டியலிட்டு காட்டியிருப்பர். இந்த வெப்சைட்டுகளிலும் அவற்றை ஆன்லைனில் வாங்குவதற்கான Flipkart, Amazon, Snapdeal போன்ற தளங்களின் இணைப்புகளை கொடுத்து இருப்பர்.

அந்த இணைப்புகளை கிளிக் செய்து அதன்மூலம் பொருட்களை வாங்கும்போது Flipkart, Amazon, Snapdeal ஆகிய தளங்கள் தங்களது வெப்சைட்டில் உள்ள பொருளை வாங்க வைத்ததற்காக அப்ளியேட் கமிசனை அந்த வெப்சைட் உரிமையாளரின் கணக்கில் ஏற்றிவிடுவர்.

நாமும் அப்ளியேட் மார்க்கெட்டிங் ஆரம்பிப்பது எப்படி?

1.அப்ளியேட் மார்கெட்டிங் ஆரம்பிக்க Amazon, FlipKart, SnapDeal, Ebay போன்ற முன்னணி நிறுவனங்களில் அப்ளியேட் ஆக இணைந்துகொள்ளவேண்டும்.

2.நமக்கென ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொள்ள வேண்டும். வெப்சைட் ஆரம்பிப்பது எப்படி என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

3.மார்கெட்டில் லேட்டஸ்டாக வந்துள்ள பொருள்களை பற்றி Review போன்று எழுதியோ அல்லது ஒரே மாதிரியான அம்சங்கள் கொண்ட இரு வேறு பொருள்களை ஒப்பிட்டு காட்டி எழுதியோ இறுதியாக இந்த பொருள்களை இங்கே சென்று வாங்கிகொள்ளலாம் என்று போட்டு உங்களது Amazon, FlipKart, SnapDeal, Ebay அப்ளியேட் இணைப்புகளை சேர்த்து வெப்சைட்டில் பதிவிட வேண்டும்.

4. Review அல்லது Product Compare செய்து பதிவிட்ட பக்கத்தினை FaceBook Groups, Google + மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் Share செய்வதின் மூலமாக நீங்கள் பதிவிட்டுள்ளதை பல நபர்களால் பார்க்கவைக்க முடியும்.

5. அப்படி பார்ப்பவர்கள் உங்களது அப்ளியேட் லிங்க் மூலமாக பொருட்களை வாங்கினால் உங்களுக்கு ஒரு தொகை கமிசனாக கிடைக்கும்.

முற்றிலும் புரிந்தவர்கள் மட்டும் முயற்ச்சிசெய்து பார்க்கவும்.

குறிப்பு :  வெப்சைட் ஆரம்பிப்பது எப்படி என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Affiliate Marketing in Tamil, Affiliate Marketing Tamil Nadu, Affiliate Marketing Jobs in Tamil Nadu

Post a Comment

0 Comments