ஆன்லைன் ஜாப்பில் கண்டிப்பாக சாதிக்க முடியுமா?
ஐடி துறையில் எப்படி ஒரு காலத்தில் வேலைவாய்ப்புகளும் சம்பளமும் கொடிகட்டி பறந்ததோ அதேபோல்தான் ஆன்லைன் வேலைவாய்ப்பும் இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமையோ அதற்க்கு தலைகீழ். வேலையில்லாத்திண்டாட்டம் என்பது வருடாவருடம் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.ஏன் இந்த நிலைமை?
நமது மக்கள் தொகை வளர்ச்சியும் அதற்கேற்ற புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகாதாதும்தான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.வருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் பேர் கல்லூரிபடிப்பை முடித்து வெளியில் வருகின்றனர். நீங்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் எந்த நிறுவனத்தால் வருடத்திற்கு இரண்டரை லட்சம் பேர்களுக்கு என புதிய பணியிடங்களை உருவாக்கமுடியும்?
ஆட்கள் வேலைக்கு கிடைக்காத காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கல்லூரி கல்லூரியாக சென்று ஆட்களை எடுத்தனர். ஆனால் நிலைமை அப்படியில்லை, மூவாயிரம் பேர் தேவைப்படும் கம்பெனிக்கு மூன்றுலட்சம் பேர் விண்ணப்பம் போடுகின்றோம். இதன் விளைவு, நிறுவனங்கள் அவர்களுக்குத்தேவையான அதிக திறமையுள்ள ஆட்களை மட்டும் பொருக்கி எடுத்துக்கொள்கின்றனர். ஆன்லைனிலும் தற்போது இதேநிலைமைதான் தொடர்கிறது.
இதில் அவர்கள் தவறு எதுவும் இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு இப்போது மூன்றுபேர் வேலைக்கு தேவைப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். முப்பதுபேர் வேலைகேட்டு வந்தால், உங்கள் வேலைக்கு பொருத்தமான மூன்று பேரை மட்டும்தானே தேர்ந்தெடுத்து வேலை கொடுப்பீர்கள்.
அப்படியானால் குறைந்தபட்ச திறமை உள்ளவர்க்கு?
இந்த உலகில் குறைந்தபட்ச திறமை உள்ளவர் என்று யாருமே இல்லை. ஒவொருவருக்குள்ளும் தனித்திறமைகள் உள்ளன. நாம்தான் அதனை குழிதோண்டி புதைத்துவிட்டு நமக்கு முன்னாள் செல்பவனின் வழியிலேயே செல்ல ஆரம்பித்துவிடுகின்றோம்.உதாரணாமாக சச்சின் டெண்டுல்கர் அவர்களை எடுத்துக்கொள்வோம். அவர் கிரிக்கெட்டில் என்னதான் பல அசைக்க முடியாத சாதனைகளை படைத்திருந்தாலும், அவரால் ரோஜர் பெடரர் போல் டென்னிஸ் விளையாட்டில் கலக்க முடியாது. அதேபோல் ரோஜர் பெடரர் டென்னிசில் என்னதான் பல அசைக்க முடியாத சாதனைகளை படைத்திருந்தாலும், அவரால் நமது சச்சின் டெண்டுல்கர் போல் கிரிக்கெட் விளையாட்டில் கலக்க முடியாது.
இவர்கள் இருவருமே அவரவர்களுக்கு பிடித்த மற்றும் ஈடுபாடுள்ள துறையை தேர்ந்தெடுத்து கஷ்டப்பட்டு உழைத்தனர், வெற்றியும் கண்டனர்.
இவர்களைப்போல்தான் நாமும் நமக்கு ஈடுபாடுள்ள துறையில் நமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் இப்போதுள்ள போட்டிகளுக்குத்தகுந்தவாரும் நம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆன்லைனில் சம்பாதிக்க என்ன என்ன தகுதிகள் வேண்டும்?
நீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டுமெனில் கீழ்காணும் தகுதிகளில் ஏதேனும் ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும்.1. Programming Knowledge in HTML+CSS (or) PHP (or) ASP .NET
2. Professional English Knowledge
Programming Knowledge
தங்களிடம் HTML+CSS (or) PHP (or) ASP .NET Programming Knowledge நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்களே சொந்தமாக வெப்சைட் டிசைனிங் செய்து சம்பாதிக்க முடியும். அதாவது மற்றவர்களுக்கு வெப்சைட் உருவாக்கித்தருவதன் மூலம் மாதம் எப்படியும் Rs.20000 உங்களால் சம்பாதிக்க முடியும்.வெப்சைட்டுகள் எதற்காக தேவைப்படுகின்றன மற்றும் வெப்சைட்டுகளால் உண்டாகும் நன்மைகள் என்னவென்று நீங்கள் தெரிந்துகொண்டால்தானே நீங்கள் ஒருவரிடம் வெப்டிசைனிங் ஆர்டர் எடுக்க பேசும்பொழுது அவருக்கு சரியாக விளக்கம் கொடுத்து ஆர்டரை சக்ஸஸ்புல்லாக முடிக்க முடியும்.
நான் ஏற்கனவே வெப்சைட்டுகளின் முக்கியத்துவம் பற்றியும் வெப்சைட் ஆரம்பிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன், அவற்றின் இணைப்புகளை கீழே கொடுத்துள்ளேன். அவற்றை படித்தவுடன் உங்களுக்கே ஓரளவிற்கு வெப்சைட்டுகளின் அத்தியாவசியத்தைப்பற்றி புரியும்.
- http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2012/07/web-hosting-and-web-designing-in-chennai.html
- http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/05/blog-post_26.html
- http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2012/05/cheap-web-hosting-in-chennai.html
என்ன நண்பர்களே மேலேயுள்ள இணைப்புகளில் உள்ள கட்டுரைகளை படித்துமுடித்துவிட்டீர்களா?
ஆரம்பத்தில் ஒரு வெப்சைட் டிசைன் செய்துகொடுக்க ஆர்டர் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் ஒரு ஐந்து ஆர்டர்கள் மட்டும் நீங்கள் நன்றாக முடித்துவிட்டால் போதும், அதற்கடுத்து நிறைய ஆர்டர்கள் தானாக உங்களைத்தேடி வரும்.
வெப்சைட் டிசைன் ஆர்டர் நல்லபடியாக எடுத்து செய்யவேண்டும் என்றால் இன்னும் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொண்டே ஆகவேண்டும். அவற்றை நான் உங்களுக்கு கற்றுத்தருகிறேன்.
உங்களாலும் நல்லபடியாக வெப்சைட் டிசைன் செய்யமுடியும் என்றால் என்னைத்தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : +91 9486854880
Professional English Knowledge
Professional English Knowledge என்பது ஒருசிலருக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று. இதில் நமது வேலை என்னவென்று பார்த்தால், நாமும் நமக்கென ஒரு வெப்சைட் துவங்கி அதில் மற்றவர்களுக்குத் தேவைப்படும் மற்றும் உபயோகமுள்ள தகவல்களை தூய ஆங்கிலத்தில் எழுதுவதன் மூலம் சம்பாதிக்கலாம்.மற்ற வெப்சைட்டுகளில் உள்ளவற்றை அப்படியே பார்த்து டைப் செய்தோ காப்பி செய்தோ போடக்கூடாது. உங்களின் சொந்த நடையில் எழுதவேண்டும். Professional English Knowledge இருப்பவர்களுக்கு சொந்தமாக எழுதுவது என்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை.
உதாரணமாக நீங்கள் தொழில்நுட்பம் (Technology) தொடர்பான வெப்சைட் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அதில் தினமும் Computer, Software, Games மற்றும் புதிதாக வரும் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை கொடுக்கவேண்டும்.
நீங்கள் கொடுக்கும் தகவல்கள் Display ஆகும் பக்கங்களில் Google நிறுவனத்தின் விளம்பரங்களை வாங்கி இணைத்துக்கொள்ளலாம். நீங்கள் தரும் தகவல்களைப் படிக்க வருபவர்கள் அந்த விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கும்பொழுது உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
ஆங்கிலத்தில் எழுதுவதில் உள்ள விதிமுறைகள்,
- ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் 550 வார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- Grammar Mistake இல்லாமல் இருக்கவேண்டும்.
- மிகமுக்கியமாக மற்ற வெப்சைட்டுகளில் இருந்து காப்பிபேஸ்ட் செய்யவே கூடாது. மற்ற தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் சொல்வதுபோல் உங்கள் சொந்த நடையில் எழுதலாம்.
உங்களுக்கென்று தனியாக வெப்சைட் ஆரம்பிப்பதற்கு ஆகும் செலவு Rs.2000 ஆகும். மற்றபடி வேறு எந்த கட்டணமும் கிடையாது.
வெப்சைட்டினை டெவலப் செய்வது எப்படி, அதனை அதிகப்படியான மக்கள் பார்வையிடும்படியாக செய்வது எப்படி போன்ற முக்கியமானவற்றை நானே உங்களுக்கு சொல்லிகொடுத்துவிடுவேன்.
உங்கள் நண்பர்கள் யாராவது வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டால் அவர்களுக்கும் இந்த கட்டுரையினை Facebook, Google+, Twitter மற்றும் Email மூலம் தெரியப்படுத்தி உதவுங்கள். உங்கள் நண்பர்களிடம் Share செய்வதற்கான Option இந்த கட்டுரைக்கு மேலேயே காணப்படும்.
ஒருவேளை உங்கள் நண்பர்களுக்கு இந்த திறமைகள் இருந்து அவர்களுக்கு இதுபற்றி தெரியாமல் இருந்திருந்தால், நீங்கள் இந்த கட்டுரையை அவர்களுடன் ஷேர் செய்யும்பொழுது அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுதிக்கொடுத்ததுபோல் இருக்கும் அல்லவா.....!
குறிப்பு : உங்களுக்குத்தெரிந்தவர்கள் மற்றும் உங்களின் நண்பர்கள் யாருக்காவது அவர்களின் தொழில் தொடர்பாக வெப்சைட்டுகள் துவங்கவேண்டுமெனில் என்னை தொடர்புகொள்ளவும். நான் அவர்களுக்கு அவர்களின் தொழிலுக்கு ஏற்றவாறு சிறந்தமுறையில் குறைந்தவிலையில் வெப்சைட்டுகள் அமைத்துக்கொடுப்பேன்.
சத்தியமூர்த்தி,
போன் : +91 9486854880
Tags : Website Designing Jobs In Tamil Nadu, Web Designing Jobs In Tamil Nadu, Full Time Online Jobs In Tamil Nadu, Content Writing Jobs, Tamil to English Translation Jobs, Article Writing Jobs
1 Comments
thank you for your message
ReplyDelete