தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்

அனைத்து தமிழ் வெப்சைட் & பிளாக் நடத்தும் நண்பர்களுக்கு வணக்கம்.....!

நம்மில் தமிழில் வெப்சைட் & பிளாக் நடத்தும் பல நண்பர்களுக்கும் அவர்களின் தளங்களுக்கு வாசகர்கள் அதிகம் இருந்தும் அதன் மூலம் சம்பாதிக்க முடியவில்லையே என்பதுதான் மிகப்பெரிய கவலை. என்னுடன் உரையாடிய தமிழில் தளம் நடத்தும் நண்பர்களும் இதே வருத்தைதான் என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.

வெப்சைட்டுகளுக்கு விளம்பரம் கொடுக்க பல Ad Networkகள் இருந்தும் யாரும் தமிழ் நடத்தப்படும் தளங்களுக்கு விளம்பரங்கள் கொடுப்பதில்லை. ஒருசில நிறுவனங்கள் மட்டுமே தமிழ் மொழியில் நடத்தப்படும் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளுக்கு விளம்பரங்கள் தருகின்றனர். இருந்தாலும் அவர்களை கண்டுபிடிப்பதுதான் நமக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

நான் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்தும் நிறுவனம் தமிழ் மொழியில் உள்ள பிளாக்குகள் மற்றும் வெப்சைட்டுகளுக்கு விளம்பரங்கள் அளிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் Google போன்ற பெரிய நிறுவனங்கள் தரும் அளவிற்கு அதிக வருமானம் தராவிட்டாலும் ஓரளவிற்கு நன்றாகவே தருவர்.

ஒரு பைசா கூடா வராமல் வெப்சைட் & பிளாக் நடத்துவதற்கு இது எவ்வளவோ பராவயில்லை அல்லவா....?

சரி, இனி அந்த நிறுவனத்தைப்பற்றியும் அவர்களிடமிருந்து எப்படி நமது தளங்களுக்கு விளம்பரங்கள் வாங்குவது எப்படி என்பதையும் பாப்போம்.

YesAdvertising தான் நான் சொன்ன நிறுவனம். இனி இவர்களிடமிருந்து விளம்பரம் பெறுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

முதலில் YesAdvertising பற்றி பார்ப்போம்,

1. இங்கே கிளிக் செய்து உங்கள் YesAdvertising கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம். கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் திறக்கும் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து உங்கள் கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம்.2. கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து Create Account கிளிக் செய்த சிறிது நேரத்தில் உங்கள் கணக்கினை உறுதிபடுத்த உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்புவார்கள். அந்த இமெயிலில் உள்ள இணைப்பினை கிளிக் செய்து உங்கள் கணக்கினை உறுதிசெய்து கொள்ளவும்.

3. Login கிளிக் செய்து உங்கள் கணக்கில் லாகின் செய்து கொள்ளவும்.

4. Traffic Source கிளிக் செய்து பிறகு Add New Traffic Source கிளிக் செய்து உங்கள் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளை இணைத்து அவற்றிற்கான முதல் விளம்பரத்தையும் Create செய்து உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.5. அடுத்தமுறை உங்கள் தளங்களுக்கு விளம்பரம் Create செய்ய Ad Zone கிளிக் செய்ய வேண்டும்.

6.  விளம்பரங்களுக்கான Code உங்கள் தளத்தில் இணைத்த 10 நிமிடங்களுக்கு பிறகு தளத்தில் விளம்பரங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

இதனைப்பற்றி உங்களுக்கு மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள Comment மூலம் தெரிவிக்கலாம். நானும் உங்களுக்கு Comment மூலமே எனது கருத்துக்களை உங்களுக்கு தெரிவிப்பேன்.

பிளாக்கரில் எப்படி விளம்பரம் போட வேண்டும்,

"Ad Zone" இல் "Add a New Zone" கிளிக் செய்து நமது தளத்திற்கென்று "Advertisement" create செய்த பின்னர்  "get zone code" கிளிக் செய்து Code காபி செய்து கொள்ளவேண்டும்.

பின்னர் உங்கள் பிளாக்கரில் "Layout" இல் சென்று "Add A Gadget" கிளிக் செய்து "HTML/Java Script" கிளிக் செய்து காப்பி செய்து வைத்துள்ள Code பேஸ்ட் செய்து "Save" பண்ணவேண்டும். இனி உங்கள் பிளாக்கில் விளம்பரம் தெரிய ஆரம்பித்துவிடும்.

Tags : Advertisements For Tamil Blogs, Ads For Tamil Websites, Who Provide Advertisements For Tamil Websites, Ad Networks For Tamil Website, Tamil Advertisements, Tamil Ad Networks, Where I Can Get Advertisements For Tamil Websites

Post a Comment

3 Comments

  1. how to post ads on my blog. i already registered with yesadvertisers...

    ReplyDelete
  2. "Ad Zone" இல் "Add a New Zone" கிளிக் செய்து நமது தளத்திற்கென்று "Advertisement" create செய்த பின்னர் "get zone code" கிளிக் செய்து Code காபி செய்து கொள்ளவேண்டும். பின்னர் உங்கள் பிளாக்கரில் "Layout" இல் சென்று "Add A Gadget" கிளிக் செய்து "HTML/Java Script" கிளிக் செய்து காப்பி செய்து வைத்துள்ள Code பேஸ்ட் செய்து "Save" பண்ணவேண்டும். இனி உங்கள் பிளாக்கில் விளம்பரம் தெரிய ஆரம்பித்துவிடும்.

    ReplyDelete
  3. hai friend yes advertising la 4 type ad model varuthu atha pathi details sollunga boss.than nama earn panna paisa epadi pakurathunu sollunga.

    ReplyDelete