இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

ஆன்லைன் ஜாப் மூலம் சம்பாதிக்க முடியுமா....?

Labels: ,

நமது நகரங்களிலும் கிராமங்களிலும் எப்படி அவரவர்களின் படிப்பு, திறமைமை மற்றும் அனுபவத்திற்கு தகுந்த வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றனவோ அதேபோல்தான் ஆன்லைனிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நாம் சரியான வேலையை தேர்ந்தெடுக்காததுதான் நமது தோல்விக்கான முக்கியமான காரணம்.

பகல் கனவுகள்

கிராமங்களில் நகரங்களில் கிடைக்கும் வேலைகளாக இருந்தாலும் சரி ஆன்லைனில் கிடைக்கும் வேலைகளாக இருந்தாலும் சரி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே நன்றாக சம்பாதிக்க முடியும். ஆன்லைன் என்றால் கஷ்டப்பட்டு உழைக்காமல் ஈமெயில் படித்தோ அல்லது காப்பி பேஸ்ட் செய்தோ அல்லது விளம்பரங்களை கிளிக் செய்தோ மாதம் பத்தாயிரம் இருபதாயிரம் சம்பாதிக்கலாம் என்ற பகல் கனவிலிருந்து வெளியே வரவேண்டும்.

ஈமெயில் படித்தோ அல்லது காப்பி பேஸ்ட் செய்தோ அல்லது விளம்பரங்களை கிளிக் செய்தோ சம்பாதிக்க முடியாது என்று சொல்லவில்லை. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மாதம் இருநூறு முன்னூறு என்று மிகவும் சொற்பமாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வகையான வேலைகளும் மிக மிக எளிதான வேலைகள் தானே. அதனால் உங்கள் மூலம் ஒரு நிறுவனத்திற்கு வரும் இலாபத்தை பொருத்துதானே உங்களுக்கும் வருமானம் கிடைக்கும்.

நீங்கள் ஒரு நிறுவனம் வைத்துள்ளீர்கள் என்றால் எந்த வேலையும் செய்யாத ஒருவருக்கு மாதம் இருபதாயிரம் கொடுப்பீர்களா என்று பிராக்டிக்கல் ஆக எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆன்லைனில் சம்பாதிக்க என்னதான் வழி?

ஆன்லைனில் நிறைய சம்பாதிக்க என்ன என்ன வழிகள் உள்ளன என்பனவற்றை நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன். அதற்கான இணைப்பு இதோ --->> ஆன்லைனில் சம்பாதிக்க வழி

என்னைப்பொறுத்தவரையில் நீங்கள் ஏற்கனவே ஒரு தொழில் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றால், ஆன்லைன் ஜாப் தேடி வீணடிக்கும் நேரத்தில் தற்பொழுது நீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலை இன்னும் ஒருபடி மேலே கொண்டுசெல்வது என்பதை பற்றி யோசித்து தொழிலை முன்னேற்றும் வழிகளை கண்டுபிடியுங்கள். தொழிலை எப்படி முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வது என்பது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள கட்டுரைகளில் சில உங்களின் பார்வைக்கு.

--->> தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவது எப்படி?
--->> செய்யும் தொழிலும் வெப்சைட்டுகளும்

Tags : Home Based Online Works In Tamil Nadu, Home Based Part Time Jobs In Tamil Nadu, The Best Online Home Based Jobs In Tamil Nadu
மேலும் படிக்க>>

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வெப்சைட் - தொழிலை முன்னேற்ற புதிய வழி...!

Labels:

ரியல் எஸ்டேட் இன் நிலைமை

தற்போதைய நிலையில் மிகுந்த வரவேற்புடன் நன்றாக சென்றுகொண்டிருக்கும் தொழில்தான் ரியல் எஸ்டேட். வீடு, இடம்,நிலம், ரூம் வாங்கி விற்பதில் இருந்து வாடகைக்கு விடுவது வரை ரியல் எஸ்டேட் தொழில் செய்வோரின் உதவி அனைவருக்கும் தேவைப்படுவதால்தான் இந்த தொழிலானது எவ்விததொய்வுமின்றி நன்றாக சென்றுகொண்டுள்ளது.

உதாரணமாக, ஒரு குடும்பத்தில் இரு பிள்ளைகள் உள்ளனர் என்றால் எதிர்காலத்தில் அவர்களுக்கு தற்போது இருக்கும் ஒரு வீடு பத்தாது, இரண்டு வீடுகள் தேவைப்படுகின்றன. இடம் எங்கு எங்கு உள்ளது என்ன என்ன விலையில் உள்ளது என்பது ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்குத்தனே தெரியும்.

மக்கள் தொகை பெருக பெருக குடியிருக்க மற்றும் தொழில் செய்ய வாடகைக்கு அல்லது சொந்தமாக இடம் ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஏனென்றால் இடம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது இல்லையா.

ரியல் எஸ்டேட் தொழிலில் வெப்சைட்டுகள்

ரியல் எஸ்டேட் தொழிலினை பற்றி மேலும் விளக்கம் கொடுக்கவேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன். வெப்சைட்டுகள் ரியல் எஸ்டேட் துறையில் எந்த அளவுக்கு பங்கு வகிக்கின்றன என்பதை இப்போது பார்ப்போம்.

உங்களது ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதில் நீங்கள் இதுவரை நல்லபடியாக முடித்த ப்ராஜக்டுகள், தற்போது போய்க்கொண்டிருக்கும் ப்ராஜக்டுகள் மற்றும் ஆரம்பிக்கபோகும் ப்ராஜக்டுகள் பற்றி பதிவுசெய்து வைக்கும்போது மக்கள் அனைத்தயும் உங்களின் வெப்சைட் மூலமாகவே அறிந்துகொள்வர்.

வீடு வாங்க / விற்க, இடம் வாங்க / விற்க, நிலம் வாங்க / விற்க என்று Category Category ஆக வகைப்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம் உங்களது கஸ்டமர்கள் வீட்டில் இருந்தபடியே உங்களது வெப்சைட் மூலமாகவே எங்கெல்லாம் வீடு, இடம்,நிலம், ரூம் இவையெல்லாம் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு உள்ளது என்பதனை தெரிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல் Google, Bing போன்ற சர்ச் என்ஜின்கள் மூலமாகவும் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் புதிய கஸ்டமர்கள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

உதாரணமாக, ஒருவர் Real Estate Brokers In Chennai என்று கூகிளில் சர்ச் செய்யும்போது உங்கள் வெப்சைட் அதில் வருவதற்க்குகூட வாய்ப்புகள் உள்ளன.

உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

Tags : Real Estate Web Designing In Tamil Nadu, Real Estate Website Design In Tamil Nadu, Real estate Portal Web Designing Company In Tamil Nadu, Web Designing Companies In Tamil Nadu
மேலும் படிக்க>>