நீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டுமா?

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

ஆன்லைன் ஜாப் பற்றிய விபரம் பெறுவதற்காக தினமும் குறைந்தபட்சம் 20 பேர்களாவது என்னை தொடர்புகொள்கின்றனர். அப்படி தொடர்புகொள்ளும் அனைவரையும் நான் மூளைச்சலவை செய்து அவர்கள் மூலம் என்னால் தினம் குறைந்தபட்சம் Rs.20000 சம்பாதிக்க முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை, என்மூலம் ஆன்லைன் ஜாப்பில் இணைபவர்கள் அனைவரும் சம்பாதிக்க வேண்டும் என்பதே என் நோக்கமாகும். ஆன்லைன் ஜாப்பில் இணைவதற்கு உங்களுக்கு என்ன என்ன தகுதிகள் வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை எழுதியுள்ளேன்.

ஆன்லைன் என்பது கேட்டதைக்கொடுக்கும் மந்திரக்கோல் போல நாம் தேடும் அனைத்தையும் நொடிபொழுதில் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் அதிசக்திவாய்ந்த ஒன்றாகும். இப்போது பொருட்கள் வாங்குவதில் இருந்து போன் பில் கட்டுவது, EB பில் கட்டுவது என்று அனைத்தும் ஆன்லைனிலேயே நடப்பதும் ஆன்லைன் என்பது யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல் ஆன்லைனில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் வேலை கொடுப்போரின் எண்ணிக்கையும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது உள்ள வேலையில்லாத்திண்டாடமும் ஆன்லைன் வேலைப்புகளைப்பற்றிய தேடல்கள் அதிகரிக்க செய்துள்ளது. நாளுக்குநாள் வேலையில்லாதோரின் எண்ணிக்கையும் ஆன்லைனில் வேலைதேடுவோரின் எண்ணிக்கையும் வளர்ந்துகொண்டேதான் உள்ளது.

ஆன்லைனில் சம்பாதிக்க எவ்வளவோ வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நாம்தான் நமக்கு பொருத்தமான ஒரு வேலையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் சம்பாதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். 90 சதவிகதம் மக்கள் தவறு செய்வது இந்தக்கட்டத்தில்தான். சிறுகுழந்தை கூட அசால்ட்டாக செய்துமுடிக்கும்படியான வேலைகளை மட்டுமே தேடி அலைந்து அதுமாதிரியான வேளைகளில் Rs.10,0000 Rs.20,0000 என்று பணம் கட்டி ஏமாறும் மக்கள் கடைசியில் சொல்லும் ஒரே வார்த்தை, "என்னிடம் அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டனர்" என்பதுதான். அப்படி எமாற்றியவர்களைப்பற்றி கருத்துகூற இப்படி ஏமாந்த்தவர்களுக்குத் துளியும் அருகதை இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், ஒரு குழந்தையே அசால்ட்டாக செய்து முடிக்கும் வேலைக்கு மாதம் Rs.50,0000 கிடைக்கும் என்று சொன்னவுடன் அதையும் நம்பி ஏமாறும் நபர்களைத்தான் உள்ளே தூக்கிவைத்து முட்டிக்கு முட்டி தட்டனும். உழைக்காமல் ஊரான் காசுக்கு ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு வேண்டுமென்றால் அவர்களை ஒரு உதாரணமாக வைத்துக்கொள்ளலாம். அதானால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஆன்லைனில் நாலு காசு சம்பாதிக்க ஆசைப்படுவோர் கீழ்காணும் சிறுபிள்ளைத்தனமான எண்ணங்களை மனதிலிருந்து அழிக்கவேண்டும்.

1) வேலை செய்யாமல் சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்ப்பது.
2) மிகவும் எளிதான வேலைகளான Email Reading, Copy Paste, SMS Reading மற்றும் Ad Clicking போன்று குழந்த்தைகளுக்குக்கூட எளிதாகத் தெரியும் வேலைகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது. ஏனென்றால் அப்படியே உங்களுக்கு எளிதான வேலைகளைக்கொடுத்து அதற்க்கு ஒரு சன்மானமும் கொடுக்க ஒரு முட்டாள்கூட முன்வரமாண்டான் என்பது உலகறிந்த விஷயம்.
3) ஒருமுறை சேர்ந்துவிட்டால் போதும் Automatic ஆக நமக்கு வருமானம் கொட்டிக்கொண்டேயிருக்கும் என்று நினைப்பது. நீங்களே ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,உங்கள் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு எந்தவொரு வேலையும் செய்யாமல் சம்பளம் கொடுப்பீர்கள் என்றால் நீங்கள் நினைப்பதில் ஒரு நியாயம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

உழைத்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்பது நேற்று பிறந்த குழந்தைக்குக்கூட தெரிந்த உண்மை. பிறகு எப்படி நம் மக்களால் எந்த வேலையும் செய்யாமல் சம்பாதிக்கமுடியும் என்று நம்பமுடிகிறது என்பதைத்தான் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அப்புறம் எப்படி நிறைய விளம்பரங்கள் வேலை செய்யாமல் சம்பாதிப்பது தொடர்பாக வருகிறது என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கும் கேட்கிறது. (இது உண்மையாக இருந்தால்) நான் இவ்வளவு தூரம் சொல்லியும் "வேலை செய்யாமல் சம்பாதிக்க ஒரு வேலை கிடைக்கும்" என்றுதான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது இந்த நம்பிக்கையையும் தகர்ப்பது என்று நான் இப்பொழுது முடிவு செய்துவிட்டேன்.

நல்லா Talent இருக்குறவனுக்கே கஷ்டப்பட்டுத்தான் வேலை கிடைக்கிறது. அந்த வேலையிலும் கொடுக்குற சம்பளத்துக்கு அதிகமாவே பெண்டை நிமிர்த்தி விடுவார்கள். அப்படி இருக்கையில் நீங்க இந்தமாதிரி "வேலை செய்யாமல் சம்பாதிக்கும்" விளம்பரத்தையும் நம்பி அவர்களிடம் சென்றால் அவர்களளுக்கு உடனே உங்களைப்பற்றி ஒரு உயர்ந்த எண்ணம் தோன்றும், "இந்த விளம்பரத்தையும் நம்பி ஒருத்தன் வந்திருக்கான்னா அவன் எவ்வளோ பெரிய மக்கு சாம்பிரானியா இருப்பான்? இவனையெல்லாம் நாம ஏமாத்த வேண்டியதே இல்லை. அவனே ஏமாந்து நம்மிடம் பணத்தை பறிகொடுக்கத்தான் வந்திருப்பான்." என்பதுதான் அந்த உயர்ந்த எண்ணம். இப்போது புரிகிறதா நண்பர்களே இந்தமாதிரியான விளம்பரங்கள் எதற்காக கொடுக்கப்படுகின்றன என்று. இதற்குமேலும் என்னால் விரிவாக விளக்க முடியாது. புரிந்தவர்கள் விழித்துக்கொள்ளுங்கள், புரியாதவர்கள் இன்னொருமுறை படித்துப் பாருங்கள் அப்பொழுதும் புரியவில்லை என்றால் உடனே இந்த மூடிவிடுங்கள்.

உழைத்து சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். நான் தவறாக ஏதாவது எழுதியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும். நான் அமைத்துக்கொடுக்கும் ஆன்லைன் வேலைவாய்ப்பைப்பற்றி இனி பார்ப்போம்.

ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது என்பதுதான் நான் உருவாக்கிகொடுக்கும் வேலைவாய்ப்பு. செய்திதாள்களில் விளம்பரங்கள் வருவதைப்பார்த்து இருப்பீர்கள். நம் அந்த செய்திதாள்களில் விளம்பரம் செய்யவேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினை அதற்கு செலுத்தவேண்டும் அல்லவா...? அதேபோல் நமது வெப்சைட்டில் விளம்பரம் செய்ய கூகிள் போன்ற நிறுவனங்கள் நமக்கு பணம் தருவர். இவற்றில் கூகிள்தான் விளம்பரங்களுக்கு அதிகம் பணம் கொடுக்கும் பெரியண்ணன். கூகிள் விளம்பரம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஆங்கில அறிவு மிகுதியாக இருக்க வேண்டும். அதாவது நாம் நினைக்கும் ஒரு விஷயத்தை அப்படியே ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் கட்டுரையாக எழுதவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அலது மூன்று கட்டுரைகள் எழுதவேண்டும் மற்றும் ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் 500 வார்த்தைகளைக்கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 கட்டுரைகளாவது எழுதியிருந்தால் மட்டுமே கூகிளில் விளம்பரம் பெற விண்ணபிக்க முடியும். அதையும் கூகிள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் படித்துப் பார்த்துவிட்டுத்தான் நமக்கு விளம்பரங்களை கொடுக்கலாமா என்பதை முடிவு செய்வார்கள்.

கூகிளைத்தவிர மற்ற நிறுவனங்கள் அந்த அளவுக்கு Knowladge எதிபார்க்க மாண்டார்கள். அதேபோல் அந்த அளவுக்கு பணமும் தரமாண்டார்கள். கூகிள் கொடுப்பதில் பாதிக்கும் குறைவாகத்தான் கொடுப்பார்கள்.

கூகிள் விளம்பரம் பெறக்கட்டணம் : Rs.5000 (Professional Website with .Com Domain)
மற்ற நிறுவனங்களின் விளம்பரம் பெறக்கட்டணம் : Rs.1000 (Basic Website with .Com Domain)

ஆன்லைன் வேலையில் இணைந்து சம்பாதிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் 9486854880.

உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ வெப்சைட் தொடங்கும் எண்ணம் இருந்தால் எங்களை தொடர்புகொள்ளவும். உங்களின் வெப்சைட்டை நாங்கள் சிறந்த முறையில் டிசைன் மற்றும் ஹோஸ்டிங் செய்து தருகிறோம்.

Post a Comment

1 Comments

  1. Dear sir,
    Sorry for typing in Tamil but I saw u r neobux onbux promotion video in you tube...I want u r help in Tamil language about neobux's referral strategy and referral auto pay method...still I HV a lot of doubt's in autopay I cont understand actually wat dey r say... So plz describe me about dis thank u sir

    ReplyDelete