மெயில் பாஸ்வேர்ட் திருடுபவர்கள்
இந்த வகையான திருடர்கள் நமது மெயில் பாஸ்வேர்டை திருடி அதனை தவறான காரியங்களுக்கு உபயோகித்து விடுவர்.இவர்கள் செய்யும் தவறுக்கு நாம் தண்டனை அனுபவிக்க வேண்டியதாகி விடும்.இது போன்ற திருடர்களிடமிருந்து உங்களை எப்படி பாதுகாத்துகொள்வது என்று நான் இப்போது சொல்கிறேன்.
இப்போது நீங்கள் இந்த படத்தில் பார்ப்பது போன்ற மெயில்கள் உங்களுக்கும் வரலாம்.அதில் உங்களுக்கு லாட்டரி அடித்துள்ளது அல்லது உங்களுக்கு பரிசு வந்துள்ளது என்று போட்டிருப்பார்கள்.உங்களுக்கு விவரங்களை அவர்களுக்கு அனுப்பசொல்வார்கள் அல்லது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ளதுபோல் இன்னொரு முறை லாகின் செய்ய வேண்டிவரும்.
இந்த பக்கம் நீங்கள் மெயில் உபயோகிக்கும் வெப்சைட்டை போலவே அச்சு அசலாக இருக்கும்.இதனை கண்டு நீங்கள் ஏமாந்து விடக்கூடாது.இதில் நீங்கள் லாகின் செய்தவுடன் சாதரணமாக உங்களின் மெயில் பக்கத்திற்கு சென்றுவிடுவீர்கள்.ஆனால் உங்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் இந்த மாதிரி உங்களுக்கு மெயில் அனுப்பிய சமூக விரோதிகளுக்கு சென்று விடும்.அவர்கள் அதனை உபயோகித்து தவறான காரியங்களை உங்கள் பெயரில் செய்து உங்களை மாட்டி விட்டுவிடுவர்.இதிலிருந்து நீங்கள் தப்பிப்பது எப்படி என்பதை நான் இப்போது விளக்குகிறேன்.
இது போன்ற மெயில்கள் அதிகமாக ஸ்பேம் போல்டருக்கு சென்றுவிடும் அதனால் அங்கு உள்ள மெயில்களை மிக கவனமுடன் கையாள வேண்டும்.
ஒரு சில மெயில்கள் தவறி உங்களின் இன்பாக்ஸ் க்கும் வந்துவிடலாம்.அவற்றில் உங்களுக்கு லாட்டரி அடித்துள்ளது அல்லது உங்களுக்கு பரிசு வந்துள்ளது என்று போட்டிருந்தால் உண்டேன் அந்த மாதிரி மெயில்களை அளித்து விடுங்கள்.
இந்த மாதிரி மெயில்களில் உள்ள ஏதாவது ஒரு லிங்க்கை கிளிக் செய்தால் நீங்கள் இன்னொருமுறை லாகின் செய்வது போல் ஒரு வெப்சைட் வரும்.இங்குதான் நீங்கள் மிக கவனமுடன் செடல்படவேண்டும்.முதலில் அட்ரஸ் பாரில் உள்ள வெப்சைட் முகவரி நீங்கள் மெயில் உபயோகிக்கும் வெப்சைட்டின் முகவரிதானா என்று சரிபார்த்து லாகின் செய்யுங்கள்.ஏனென்றால் சில சமூக விரோதிகள் நீங்கள் மெயில் உபயோகிக்கும் வெப்சைட்டின்பக்கங்களை போலவே அச்சு அசலாக போலி பக்கன்க்களை உருவாக்கி விடுகின்றனர்.
Related Keywords : Konganapuram Online Jobs,Konganapuram Part Time Jobs,Konganapuram Internet Job,Konganapuram Part Time Online Job,Konganapuram Free Job,Konganapuram Home based Online Job,Online Jobs In Konganapuram,Part Time Jobs In Konganapuram,Internet Job In Konganapuram,Part Time Online Job In ,Free Job In Konganapuram,Home based Online Job In Konganapuram,Konganapuram,Tamil Nadu,tamil,Konganapuram
0 Comments