அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!

நீங்கள் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்றால் நீங்கள் நினைத்த தொழிலில் அல்லது வேலையில் எந்த குழப்பமும் இல்லாமல் முழு மூச்ச்சுடன் இறங்கிட வேண்டும். செய்யும் வேலைகளை அதன் மீது பக்தி கொண்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்தாலே போதும்.


சம்பாதிப்பதற்கான வழி என்னவென்பதை இனி பார்ப்போம்.

வெப்சைட் தேவைப்படுபவர்களுக்கு வெப்சைட் டிஸைன் செய்து கொடுப்பதுதான் தற்போதைய நிலையில் ஒரு நல்ல தொழிலாக உள்ளது. ஏனென்றால் தற்போதுதான் அனைத்து வகையான தொழில் புரிபவர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளது.

வெப்சைட்டுகளை பற்றி ஒருவர் சொல்லித்தான் நமக்கு தெரியவேண்டும் என்பதில்லை. நாம் அன்றாட வாழ்வில் தினமும் பலதரப்பட்ட வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம்.

இன்டர்நெட் என்பது அனைவரின் கைகளிலும் தவழும் குழந்தையை போல் ஆகிவிட்ட காரணத்தினால் தொழில் செய்யும் அனைவரும் தங்களுக்கென்று விசிட்டிங் கார்டு போல வெப்சைட் ஒன்றினையும் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பலருக்கு வெப்சைட்டின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளாததற்கு காரணங்கள்,

1. யார் வெப்சைட் டிசைன் செய்து தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.

2. வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பவர்கள் சிலர் இருபதாயிரம் முப்பதாயிரம் என்று கட்டணம் கேட்டிருப்பர். அனைவராலும் அவ்வளவு செலவு செய்து வெப்சைட் ஆரம்பிக்க முடியாது என்பது நீங்களும் அறிந்ததே.

ஆனால் நிச்சயம் அனைவராலும் வெப்சைட் ஆரம்பிக்க ரூபாய் ஐயாயிரம் - பத்தாயிரம் செலவு செய்ய முடியும்.

மற்றவர்கள் இருபதாயிரம் வாங்கும் வெப்சைட்டிற்கு நாம் ஐயாயிரம் ரூபாய் - பத்தாயிரம் ரூபாய் வாங்கினால் நமக்கு கட்டுப்படியாகுமா என்று நாம் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.

ஏனென்றால் நீங்கள் நன்றாக வெப்சைட் டிசைன் செய்யக்கற்றுக்கொண்டீர்கள் என்றால் உங்களால் அதிகபட்சம் இரண்டே நாட்களில் ஒரு வெப்சைட்டினை நல்லமுறையில் செய்துகொடுக்க முடியும்.

ஒரு வெப்சைட்டிற்கு Rs.5000 வாங்குகிறீர்கள் என்றால் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க ஆகும் செலவு Rs.1000 போக உங்களுக்கு Rs.4000 இலாபம் கிடைக்கும்.

மாதம் ஐந்து வெப்சைட் ஆர்டர்கள் எடுத்து செய்துகொடுத்தாலே போதும் Rs.4000*5 = Rs.20000 மாத வருமானமாக கிடைக்கும்.

ஒருவருக்கு வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பதின் மூலம் வரும் வருமானம் ஒரு முறையோடு நின்றுவிடுவதில்லை. ஒவ்வொரு வருடமும் ரினிவல் செய்வதின் மூலம் உங்களுக்கு வருமானம் வந்துகொண்டேயிருக்கும்.

உங்கள் மூலம் வெப்சைட் ஆரம்பித்தவர் அதை ரினிவல் செய்யும்போதும் உங்களின் மூலமாகத்தான் ரினிவல் செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் வெப்சைட்டை வருடம் முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுவர், அதற்கென்று தனியாக வருடத்திற்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை பெற்றுக்கொள்ளலாம்.

வெப்சைட் டிசைன் செய்வதற்கான ஆர்டர்களை எடுப்பது எப்படி?


நீங்களும் வெப்சைட் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரிந்தால்தானே அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கோ வெப்சைட்டுகள் தேவைப்படும்பொழுது உங்களை தொடர்புகொள்வர். கீழ்காணும் வழிகளின் மூலம் நீங்களும் வெப்சைட் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முடியும்.

  1. OLX, Quikrr போன்ற Classified வெப்சைட்டுகளில் விளம்பரப்படுத்தலாம்.
  2. indiamart.com, Tradeindia.com போன்ற தொழில்களுக்கான வெப்சைட்டுகளில் விளம்பரப்படுத்தலாம்.
  3. உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நாங்களும் வெப்சைட் டிசைன் செய்து கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு யாருக்கேனும் வெப்சைட்டுகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்புகொள்ள சொல்லுங்கள், நாங்கள் அவர்களுக்கான வெப்சைட்டினை நல்ல முறையில் அமைத்துக் கொடுப்போம். என்று சொல்லிவைப்பத்தின் மூலமும் ஆர்டர்கள் வர வாய்ப்புள்ளது.
  4. நமது தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அதிகரிப்பது எப்படி?

இலவசமாக வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : 9486854880.

The best home based online job in tamil nadu, Real paying home based online jobs in tamil nadu, Genuine part time online jobs in tamil nadu

Post a Comment

0 Comments