இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

வெப்சைட்டுகள் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?

Labels:

மேலும் படிக்க>>

ஆண்ட்ராய்டு மூலம் சம்பாதிப்பது எப்படி?

Labels:

நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாகிவிட்ட ஆண்ட்ராய்டு மூலம் சம்பாதிப்பது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

இந்தியாவில் மட்டும் பல கோடி பேர்களுக்கும் மேல் ஆண்ட்ராய்டுபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். போட்டோ எடிட் செய்ய, செய்திகளை தெரிந்துகொள்ள, வால்பேப்பர் வைக்க, வீடியோ பார்க்க, ராசிபலன் பார்க்க என்று பலதரப்பட்ட வகையான அப்ளிகேசன்கள் ஆண்ட்ராய்டு போன்களுக்கு கொட்டிக்கிடப்பது அனைவரும் அறிந்ததே.

அந்த அப்ளிகேசன்களை உருவாக்கியவர்கள் அந்த அப்ளிகேசன்களை உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையை பொறுத்து மாதம் சில ஆயிரங்களில் ஆரம்பித்து பல இலட்சங்களில் சம்பாதித்துக்கொண்டுள்ளனர்  என்பது பெரும்பாலும் யாவரும் அறியாத ஒன்று.

அந்த அப்ளிகேசங்களுக்குள் டிஸ்ப்ளே ஆகும் விளம்பரங்களின் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாலேயே அதிகம் அப்ளிகேசன்கள் ஆண்ட்ராய்டில் உலாவந்துகொண்டுள்ளன.

உங்களாலும் சொந்தமாக ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்கமுடியும் என்றால் நீங்களும் நிச்சயமாக அதன்மூலம் நன்றாக சம்பாதிக்க முடியும்.

இதற்க்கு நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் டெவலப்பராக இருக்கவேண்டும் என்று கூட இல்லை.

உங்களுக்கு எந்தமாதிரியான அப்ளிகேசன் கொடுத்தால் மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும் அதிகம் பேரை உபயோகப்படுத்த வைக்கமுடியும் என்று ஐடியா மட்டும் இருந்தால் கூடபோதும். யாரேனும் ஒரு நல்ல ஆண்ட்ராய்டு டெவலப்பரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டுகூட இதனை ஒரு பிசினசாக செய்யலாம்.

உங்கள் அப்ளிகேசன்களை எவ்வளவுபேர் உபயோகிக்கிறார்கள் என்பதனை பொறுத்து உங்கள் வருமானம் இருக்கும்.

ஏதும் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் இங்கு கிளிக் செய்து பதிவுசெய்யவும். : https://www.youtube.com/watch?v=ZAftEJHe0p4

Available Android Online Jobs in Tamil Nadu, Home based android application creation jobs in Tamil Nadu, Part time online based android development jobs in Tamil Nadu
மேலும் படிக்க>>

அப்ளியேட் மார்கெட்டிங் மூலம் சம்பாதிப்பது எப்படி?

Labels:

அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றொரு ஆன்லைன் வேலைவாய்ப்பு இருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் அவ்வளோ சம்பாதிக்கலாம் இவ்வளோ சம்பாதிக்கலாம், நாங்கள் பயிற்சி தருகின்றோம் என்பன போன்ற விளம்பரங்களையும் பார்த்து இருப்பீர்கள். பயிற்சி அளிப்பதாகக்கூறி பலர் ஏமாற்றி கொள்ளை அடிப்பதால் ஆன்லைன் ஜாப் என்றாலே மக்கள் தெறித்து ஓடுகின்றனர். ஆன்லைன் பொறுத்தவரையில் ஒவ்வொரு அசைவுமே காசுதான்.

எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டோடு இறங்கி செய்தால் மட்டுமே ஒரு நல்ல பலனை எதிர்பார்க்கமுடியும். அதை விடுத்து வெறும் பயிற்சியை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.

அப்ளியேட் மார்கெட்டிங் செய்தால் பணம் வரும் என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் ஆரம்பிக்காமல், அப்ளியேட் மார்கெட்டிங் என்றால் என்ன அதில் நமக்கு எதற்காக பணம் கொடுக்கின்றார்கள், நாம் செய்யப்போகும் வேலைதான் என்னவென்பதை முதலில் தெளிவாக புரிந்துகொண்டு வேலையை ஆரம்பித்தால் மட்டுமே அதில் வெற்றிபெற்று நாம் நினைத்தபடி பணம் ஈட்டமுடியும்.

அப்ளியேட் மார்கெட்டிங் என்றால் என்ன?

அப்ளியேட் மார்கெட்டிங் என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுகொடுப்பது ஆகும். உதாரணமாக, 1000 ரூபாய் மதிப்புடைய பொருளை நீங்கள் விற்று தருகின்றீர்கள் என்றால், உங்களுக்கு அந்த பொருளின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையினை கமிசனாக வழங்குவார். 1000 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு கமிசன் 10% என்றால் உங்களுக்கு கிடைக்கும் தொகை Rs.100 ரூபாய் ஆகும்.

அப்ளியேட் மார்கெட்டிங் செய்வது எப்படி?

இன்டர்நெட் மாபெரும் வளர்ச்சியடைந்து பட்டிதொட்டியெல்லாம் சென்றுவிட்ட இந்த காலத்தில் யார் பொருளை விற்க போகிறார்கள் அதை நாம் எப்படி விற்றுக்கொடுத்து கமிசன் வாங்குவது என்று எல்லாம் கவலை கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

Amazon, FlipKart, SnapDeal, Ebay மற்றும் இவை போன்ற பல நிறுவனங்கள் ஆன்லைனிலேயே பல இலட்சக்கணக்கான பொருட்களை தினமும் விற்றுவருகின்றனர். சமையல் பொருட்கள், பர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் (Mobile, TV, Audio Systems), வீட்டு உபயோகபொருட்கள் (Mixer, Grinder, Fridge, Washing Machine) என அனைத்து பொருட்களையும் ஆன்லைனிலேயே விற்று வருகின்றன.

நாம் இதுபோன்று ஆன்லைனில் விற்பனை செய்யும் இணையதளங்களில் அப்ளியேட் ஆக இணைந்து கொண்டால் நமக்கென்று ஒரு அப்ளியேட் ஐடி தருவார்கள். அந்த ஐடியை வைத்து அனைத்து பொருட்களுக்கும் அப்ளியேட் லிங்க் எடுத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம்.

நமது அப்ளியேட் லிங்க் மூலம் பொருட்களை வாங்கவைப்பது எப்படி?
ஒருவரை ஒரு பொருளை வாங்க வைக்கவேண்டும் என்றால் முதலில் அந்த பொருளை பற்றி அனைத்து விபரங்களையும் நிறைகளையும் குறைகளையும் அவருக்கு புரியவைக்கவேண்டும்.

Product Review, Product Comparison அடிப்படையாகக்கொண்டு இயங்கும் வெப்சைட்டுகளை பார்த்து இருப்பீர்கள். Product Review வெப்சைட்டுகளில் அனைத்து முக்கியமான பொருட்களைப்பற்றியும் அவற்றின் நிறைகுறைகளை பற்றியும் கொடுத்து இறுதியாக அவற்றை ஆன்லைனில் வாங்குவதற்கான Flipkart, Amazon, Snapdeal போன்ற தளங்களின் இணைப்புகளை கொடுத்து இருப்பர்.

Product Comparison வெப்சைட்டுகளில் ஒரே மாதிரியான இரு பொருள்களுக்கு இடையேயான வேறுபாடுகளையும் நிறைகுறைகளையும் ஒப்பிட்டு பட்டியலிட்டு காட்டியிருப்பர். இந்த வெப்சைட்டுகளிலும் அவற்றை ஆன்லைனில் வாங்குவதற்கான Flipkart, Amazon, Snapdeal போன்ற தளங்களின் இணைப்புகளை கொடுத்து இருப்பர்.

அந்த இணைப்புகளை கிளிக் செய்து அதன்மூலம் பொருட்களை வாங்கும்போது Flipkart, Amazon, Snapdeal ஆகிய தளங்கள் தங்களது வெப்சைட்டில் உள்ள பொருளை வாங்க வைத்ததற்காக அப்ளியேட் கமிசனை அந்த வெப்சைட் உரிமையாளரின் கணக்கில் ஏற்றிவிடுவர்.

நாமும் அப்ளியேட் மார்க்கெட்டிங் ஆரம்பிப்பது எப்படி?

1.அப்ளியேட் மார்கெட்டிங் ஆரம்பிக்க Amazon, FlipKart, SnapDeal, Ebay போன்ற முன்னணி நிறுவனங்களில் அப்ளியேட் ஆக இணைந்துகொள்ளவேண்டும்.

2.நமக்கென ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொள்ள வேண்டும். வெப்சைட் ஆரம்பிப்பது எப்படி என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

3.மார்கெட்டில் லேட்டஸ்டாக வந்துள்ள பொருள்களை பற்றி Review போன்று எழுதியோ அல்லது ஒரே மாதிரியான அம்சங்கள் கொண்ட இரு வேறு பொருள்களை ஒப்பிட்டு காட்டி எழுதியோ இறுதியாக இந்த பொருள்களை இங்கே சென்று வாங்கிகொள்ளலாம் என்று போட்டு உங்களது Amazon, FlipKart, SnapDeal, Ebay அப்ளியேட் இணைப்புகளை சேர்த்து வெப்சைட்டில் பதிவிட வேண்டும்.

4. Review அல்லது Product Compare செய்து பதிவிட்ட பக்கத்தினை FaceBook Groups, Google + மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் Share செய்வதின் மூலமாக நீங்கள் பதிவிட்டுள்ளதை பல நபர்களால் பார்க்கவைக்க முடியும்.

5. அப்படி பார்ப்பவர்கள் உங்களது அப்ளியேட் லிங்க் மூலமாக பொருட்களை வாங்கினால் உங்களுக்கு ஒரு தொகை கமிசனாக கிடைக்கும்.

முற்றிலும் புரிந்தவர்கள் மட்டும் முயற்ச்சிசெய்து பார்க்கவும்.

குறிப்பு :  வெப்சைட் ஆரம்பிப்பது எப்படி என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Affiliate Marketing in Tamil, Affiliate Marketing Tamil Nadu, Affiliate Marketing Jobs in Tamil Nadu
மேலும் படிக்க>>

நீங்களும் சம்பாதிக்க வேண்டுமா?

Labels:
வணக்கம் நண்பர்களே...!

நீங்களும் நன்றாக சம்பாதிக்க புதியதொரு வழியினை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டுள்ளீர்களா...?

கவலையே வேண்டாம் நண்பர்களே... இந்த பரந்த விரிந்த உலகில் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. எனக்கு ஒரு சில வழிகள் தெரிந்து இருக்கலாம், உங்களுக்கு ஒரு சில வழிகள் தெரிந்து இருக்கலாம். அதேபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் எப்படி  பணம் சம்பாதிப்பது  என்பது தொடர்பாக புதிய யோசனைகள் உதித்துக்கொண்டிருக்கும்.

நான் தினம் தினம் எனது அனுபவத்தின் அடிப்படையிலும் எனது நண்பர்களின் அனுபவத்தின் அடிப்படையிலும் கண்டறிந்த பணம் பண்ணும் வழிமுறைகளை பகிர்ந்து கொள்ளப்போகின்றேன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் நான் தினமும் அப்டேட் செய்யும் யோசனைகளை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.Enter your email address:


Related Searches : Earn Money in Tamil Nadu, Online Jobs in Tamil Nadu, Part Time Jobs in Tamil Nadu, Home Based Jobs in Tamil Nadu
மேலும் படிக்க>>

கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி?

Labels:


வணக்கம் நண்பர்களே...!

நம்மில் பிளாக் மற்றும் வெப்சைட் வைத்திருக்கும் அனைவரும் சம்பாதிக்க ஆசைப்படும்போது நம் கண்ணிற்கு தெரிவது கூகிள் அட்சென்ஸ் மட்டுமே. என்னதான் அனைவரும் அவரவர் பிளாக்குகளுக்கும் வேப்சைட்டுகளுக்கும் கூகிள் அட்சென்ஸ் வாங்க படாதபாடு பட்டாலும் அப்ரூவல் மட்டும் வாங்க முடிவதே இல்லை.

நான் தற்போது கூகிள் அட்சென்ஸ் அப்ரோவல் கிடைக்காதவர்களுக்கான சிறந்த மாற்று விளம்பர நிறுவனத்தினை கண்டறிந்துள்ளேன். இந்த நிறுவனத்தினை பொறுத்தவரை அனைத்து மொழி தளங்களையும் அனுமதிக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன். Adult , Hacking மற்றும் பிற இல்லீகல் வெப்சைட்டுகளை இவர்கள் அனுபதிப்பது கிடையாது.

இங்கே கிளிக் செய்து Publisher ஆக Signup செய்து கொள்ளுங்கள். Signup செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு Confirmation Letter என்று ஒரு Verification Link அனுப்புவார்கள். அதை கிளிக் செய்தவுடன் உங்கள் Publisher Account கிரியேட் ஆகிவிடும்.

லாகின் செய்த பிறகு Sites மெனு கிளிக் செய்து உங்களது பிளாக்குகள் மற்றும் வெப்சைட்டுகளை இணைத்துக்கொள்ளலாம். 24 மணி நேரத்தில் உங்களது பிளாக் மற்றும் வெப்சைட்டுகள் அப்ரூவ் ஆகிவிடும்.

அப்ரூவல் கிடைத்தவுடன், Add New Channel கிளிக் செய்து நமக்கு தேவையான அளவில் விளம்பரங்களை Generate செய்துகொள்ளலாம். ஒவ்வொரு தளத்திற்கும் தலா ஒரு Popunder விளம்பரம் கண்டிப்பாக வைத்துகொள்ளுங்கள். ஏனென்றால், மற்ற விளம்பரங்களை விட Popunder தான் அதிக அளவில் வருமானம் தருகின்றது.


இந்த விளம்பர நிறுவனத்தில் உறுப்பினர் ஆக இங்கே கிளிக் செய்யவும்.

Google Adsense For Tamil Websites, Google Adsesne Tamil Nadu, Google Adsense in Tamil Nadu, Google Adsense For Tamil Blogs
மேலும் படிக்க>>

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

Labels:

ஆடு வளர்ப்பு, கோழி  வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்து வருகிறது.‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:

நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத் தில் நிறைய தடுமாற்றங்களைச் சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.

அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது. இன்று குறைந்த முதலீட்டில் நிறைய சம்பாதிக்க நினைக்கும் ஆட்களுக்கு இந்த தொழில் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.

பண்ணைவைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.

இதற்கு ஆகும் செலவு:


5 ஜோடி பாம்பு குட்டிகள் : ரூ.10,000

25 வெள்ளை எலிகள் (தீவனம்) : ரூ.2,000

கொட்டாய் செலவு : ரூ.10,000

பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் : ரூ.60,000

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்

வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:


குட்டிகளுக்கு பார்வைத் திறனும்,கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது. குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.

5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும். 1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம். ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும். அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.

கேட்கவே தலை சுற்றுகிறதா? இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.

ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:


கோப்ரா கோபால்,

1000/1 தண்டுமுட்டிப்பாளையம்,

பெருந்துறை,

ஈரோடு - 634717

(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு. இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)

பின்குறிப்பு:


ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும். அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.

Snake Farm Business In Tamil Nadu, Snake Vinom Business In Tamil Nadu, Snake Poison Tamil Nadu
மேலும் படிக்க>>

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

Labels:

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!

நீங்கள் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்றால் நீங்கள்தான் அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். சினிமாவில் நடப்பது போல யாரும் வந்து உங்களை பணக்காரனாக்கமாட்டார்கள்.

இன்டர்நெட் மூலம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி இருக்கின்றது என்றுதான் எங்களால் வழிகாட்ட முடியும். அதற்குமேல் உங்களது முயற்சிகள்தான் உங்களை நல்லநிலைக்கு கொண்டுசெல்லும்.

உதாரணமாக பசி என்று வந்தவனுக்கு இலையில் சாப்பாடு பரிமாறத்தான் முடியும். அதை அவன்தான் கையால் எடுத்து உண்ணவேண்டும், ஒருவர் வந்து ஊட்டிஎல்லாம் விடமுடியாது.

அதேபோல்தான் உங்களுக்காக மற்றவர்கள் அவர்களது நேரத்தை வீணடித்து உதவிகளை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. நீங்கள் முன்னேறவேண்டும் என்றால் நீங்கள்தான் நன்றாக யோசிக்கவேண்டும் நன்றாக உழைக்கவேண்டும்.

சம்பாதிப்பதற்கான வழி என்னவென்பதை இனி பார்ப்போம்.


வெப்சைட் தேவைப்படுபவர்களுக்கு வெப்சைட் டிஸைன் செய்து கொடுப்பதுதான் தற்போதைய நிலையில் ஒரு நல்ல தொழிலாக உள்ளது. ஏனென்றால் தற்போதுதான் அனைத்து வகையான தொழில் புரிபவர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளது.

வெப்சைட்டுகளை பற்றி ஒருவர் சொல்லித்தான் நமக்கு தெரியவேண்டும் என்பதில்லை. நாம் அன்றாட வாழ்வில் தினமும் பலதரப்பட்ட வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம்.

இன்டர்நெட் என்பது அனைவரின் கைகளிலும் தவழும் குழந்தையை போல் ஆகிவிட்ட காரணத்தினால் தொழில் செய்யும் அனைவரும் தங்களுக்கென்று விசிட்டிங் கார்டு போல வெப்சைட் ஒன்றினையும் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பலருக்கு வெப்சைட்டின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளாததற்கு காரணங்கள்,

1. யார் வெப்சைட் டிசைன் செய்து தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.

2. வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பவர்கள் இருபதாயிரம் முப்பதாயிரம் என்று கட்டணம் கேட்டிருப்பர். அனைவராலும் அவ்வளவு செலவு செய்து வெப்சைட் ஆரம்பிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் நிச்சயம் அனைவராலும் வெப்சைட் ஆரம்பிக்க ரூபாய் ஐயாயிரம் - பத்தாயிரம் செலவு செய்ய முடியும்.

மற்றவர்கள் இருபதாயிரம் வாங்கும் வெப்சைட்டிற்கு நாம் ஐயாயிரம் ரூபாய் - பத்தாயிரம் ரூபாய் வாங்கினால் நமக்கு கட்டுப்படியாகுமா என்று நாம் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.

ஏனென்றால் நீங்கள் நன்றாக வெப்சைட் டிசைன் செய்யக்கற்றுக்கொண்டீர்கள் என்றால் உங்களால் அதிகபட்சம் இரண்டே நாட்களில் ஒரு வெப்சைட்டினை நல்லமுறையில் செய்துகொடுக்க முடியும்.

ஒரு வெப்சைட்டிற்கு Rs.5000 வாங்குகிறீர்கள் என்றால் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க ஆகும் செலவு Rs.1000 போக உங்களுக்கு Rs.4000 இலாபம் கிடைக்கும்.

மாதம் ஐந்து வெப்சைட் ஆர்டர்கள் எடுத்து செய்துகொடுத்தாலே போதும் Rs.4000*5 = Rs.20000 மாத வருமானமாக கிடைக்கும். ஒருவருக்கு வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பதின் மூலம் வரும் வருமானம் ஒரு முறையோடு நின்றுவிடுவதில்லை. திரும்ப திரும்ப அவரின் மூலம் உங்களுக்கு வருமானம் வந்துகொண்டேயிருக்கும்.

உங்கள் மூலம் வெப்சைட் ஆரம்பித்தவர் அதை ரினிவல் செய்யும்போதும் உங்களின் மூலமாகத்தான் ரினிவல் செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் வெப்சைட்டை வருடம் முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுவர், அதற்கென்று தனியாக வருடத்திற்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை பெற்றுக்கொள்ளலாம்.

வெப்சைட் டிசைன் செய்வதற்கான ஆர்டர்களை எடுப்பது எப்படி?


நீங்களும் வெப்சைட் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரிந்தால்தானே அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கோ வெப்சைட்டுகள் தேவைப்படும்பொழுது உங்களை தொடர்புகொள்வர். கீழ்காணும் வழிகளின் மூலம் நீங்களும் வெப்சைட் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முடியும்.

  1. OLX, Quikrr போன்ற Classified வெப்சைட்டுகளில் விளம்பரப்படுத்தலாம்.
  2. indiamart.com, Tradeindia.com போன்ற தொழில்களுக்கான வெப்சைட்டுகளில் விளம்பரப்படுத்தலாம்.
  3. உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நாங்களும் வெப்சைட் டிசைன் செய்து கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு யாருக்கேனும் வெப்சைட்டுகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்புகொள்ள சொல்லுங்கள், நாங்கள் அவர்களுக்கான வெப்சைட்டினை நல்ல முறையில் அமைத்துக் கொடுப்போம். என்று சொல்லிவைப்பத்தின் மூலமும் ஆர்டர்கள் வர வாய்ப்புள்ளது.
  4. முதல் கட்ட முயற்சியாக Rs.500 அல்லது Rs.1000 ரூபாய்க்கு தினத்தந்தி, தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும் குமுதம், விகடன், குங்குமம் போன்ற வார இதழ்களிலும் விளம்பரம் கொடுத்து பார்க்கலாம்.

இலவசமாக வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : 9486854880.

The best home based online job in tamil nadu, Real paying home based online jobs in tamil nadu, Genuine part time online jobs in tamil nadu
மேலும் படிக்க>>

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் மக்கள் கையில் மட்டுமே..!

Labels:


பலர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சொல்லுவதை ஒரு ஸ்டைலாகவே மாற்றிவிட்டனர்.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சியை சார்ந்தே உள்ளது. அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் பணக்கார நாடுகளாக உள்ளன என்றால் அது அவர்களது நாட்டில் உள்ள மக்கள் புதிதாக தொழிலை துவங்கி வெற்றிகரமாக நடத்துகின்றனர்.

Microsoft, Google, Apple மற்றும் Facebook போன்ற அனைத்து நிறுவனங்களுமே சாதாரண மனிதர்களால் தொடங்கப்பட்டவையே என்பது யாவரும் அறிந்ததே...!

சீனா முன்னேற காரணம் உலகுக்கே அவர்கள்தான் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பனியன் உற்பத்தி போன்ற மற்ற துறைகளிலும் அங்குள்ள நிறுவனங்கள் உலகளவில் கொடிகட்டிப்பறக்கின்றன.

காங்கிரசாக இருந்தாலும் பாஜக வாக இருந்தாலும் அரசாங்கத்தால் திட்டங்களை மட்டுமே அறிவிக்கமுடியும். அதை நல்லவழியில் பயன்படுத்திக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. அரசாங்கம் தொழில் செய்ய கொடுக்கும் கடன் தொகையினை பெற்றுக்கொண்டபிறகு ஒருவரது முதல் யோசனையே அதை கட்டாமல் தப்பிப்பது என்பதாகத்தான் உள்ளது. என்ன தொழில் ஆரம்பிக்கலாம் அதை எப்படி முன்னுக்கு கொண்டுவரலாம் என்பதெல்லாம் பற்றி யோசிப்பதே இல்லை.

ஒருவர் ஒரு தொழில் ஆரம்பித்து அவருக்கு நல்ல இலாபம் வந்தால் உடனே டஜன் கணக்கில் அனைவரும் அதே தொழிலை ஆரம்பித்து ஈ ஓட்டிக்கொண்டு இருந்தால் எப்படி முன்னேற முடியும்.


உதாரணாமாக தமிழ்நாட்டில் மட்டும் 550 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் கல்லூரிகள் மட்டும் இவ்வளவு என்றால் மற்ற கல்லூரிகளையும் சேர்த்து எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பாருங்கள். தேவைக்கு அதிகமாக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்ட காரணத்தினால்தான் பல கல்லூரிகள் மாணவர்கள் இன்றி கற்றுவாங்கிக்கொண்டு உள்ளன.

எனக்கு தெரிந்தே பலர் நோகாமல் நோம்பி கும்பிட அதாவது உழைக்காமல் பணம் சம்பாதிக்க மட்டுமே வழிகளை தேடிக்கொண்டு உள்ளனர்.


இதற்கும் பல உதாரணங்கள் என்னிடம் உள்ளன. குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற விளம்பரங்களை நம்பி MLM, ஈமு கோழி போன்றவற்றிலும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு புதிதாக துவங்கப்பட்ட நிதிநிறுவனங்கள் போன்றவற்றிலும் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமான எவ்வளவோபேர் பற்றி நீங்களும் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்காகவும் கிரிக்கெட் வீரர்களுக்காகவும் தெருக்கோடிகளில் ஆட்டம் போட்டுக்கொண்டும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் இருக்கும் நாம் எப்போதாவது நாமும் அவர்களைப்போல் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா...?

நம்மைப்போல் பலர் சேர்ந்ததுதானே நாடு...?


மக்கள் இல்லாமல் நாடு என்ற ஒன்று கிடையாதே...!

மக்களாகிய நாம் முன்னேறினாலே போதும், நாடு தானாக முன்னேறிவிடும்...!
மேலும் படிக்க>>

எங்களுடன் இணைந்து சம்பாதிக்கலாம் வாங்க....!

Labels: ,

வணக்கம் நண்பர்களே...!

நாங்கள் வெப்ஹோஸ்டிங் , வெப்டிசைனிங் மற்றும் வெப்சைட் டெவலப்மெண்ட் போன்ற சேவைகளை அளித்துவருவது யாவரும் அறிந்ததே.

ZolaHost தான் எங்களது நிறுவனம் என்பதும் தங்களில் பலரும் அறிந்ததே. நீங்களும் நமது ZolaHost இல் இணைந்து சம்பாதிக்க ஒரு வாய்ப்பினை இப்பொழுது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதாவது உங்கள் மூலம் எங்களுக்கு வரும் வெப்ஹோஸ்டிங் , வெப்டிசைனிங் மற்றும் வெப்சைட் டெவலப்மெண்ட் ஆர்டர்களுக்கு 20% கமிசன் வழங்கப்படும்.

நீங்கள் எடுத்து தரும் ஆர்டர் மூலம் எங்களுக்கும் இலாபம் உங்களுக்கும் இலாபம் என்பதே இதன் கான்செப்ட் ஆகும்.

ஆர்டர் எடுப்பதற்காக நீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. உங்களுக்கு தெரிந்தர்வளுக்கே கண்டிப்பாக வெப்சைட்டுகள் தேவைப்படும். எப்படியென்றால் உங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களில் அநேகம் பேர் சொந்தமாக பிசினஸ் செய்து கொண்டிருப்பார்கள்.

உதாரணமாக ரியல் எஸ்டேட், கார் பைக் வாங்கி விற்பது, ஸ்பேர்பார்ட்ஸ் விற்பது, சேல்ஸ் & சர்வேஸ் செய்வது இது போன்று பல தொழில்கள் உள்ளன. இவை போன்ற தொழில்களுக்கு வெப்சைட் ஒன்று உருவாக்கவேண்டும் என்பது அத்தியாவசியாமான ஒன்று.

இப்பொழுது கொஞ்சம் யோசித்து பாருங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கே எத்தனை பேருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது என்று. அவர்கள் எப்படியும் வேறு யாராவது ஒருவர் மூலம் அவர்களுக்கான வெப்சைட்டினை உருவாக்கிக்கொள்ளத்தான் போகிறார்கள்.

அதுவே உங்களின் மூலமாக உருவாக்கும்பொழுது உங்களுக்கும் வருமானம் கிடைக்கிறது அல்லவா? உங்களின் மூலம் வரும் ஆர்டர்களுக்கு நாங்கள் 20% கமிஷன் உங்களுக்கு கொடுக்கின்றோம்.

ஒரு வெப்சைட் டிசைன் செய்துகொடுக்க உங்களின் மூலம் வரும் வாடிக்கையாளர் Rs.10000 செலுத்துகின்றார் என்றால் உங்களுக்கு அதிலிருந்து 20% கமிஷன் தொகையான Rs.2000 கிடைக்கும்.

எங்களின் சிறப்பம்சங்கள்,

User Friendly Control Panel : எங்கள் மூலம் வாடிக்கியாளர்கள் பெரும் வேப்சைட்டுடன் அதை நிர்வகிப்பதற்காக cPanel எனும் கண்ட்ரோல் பேணல் கொடுப்போம். நாங்கள் cPanel  ஆனது யாவரும் எளிதில் பிரிந்துகொண்டு உபயோகிக்கும்வண்ணம் இருக்கும்.

Email Accounts : வாடிக்கையாளர்களே அவர்களுக்குத்தேவையான ஈமெயில் கணக்குகளை அவர்களின் வெப்சைட்டின் பெயரிலேயே உருவாக்கிக்கொள்ளலாம். உதாரணமாக sathya@akavai.com, info@akavai.com, contact@akavai.com

Daily Stats : தினமும் வெப்சைட்டினை எவ்வளவு பேர் பார்த்துள்ளனர் எந்த எந்த இடங்களில் இருந்து பார்த்துள்ளனர் போன்ற விபரங்களை எளிதில் தெரிந்துகொள்ளும் வசதியும் செய்து தரப்படும்.

Virus Scanner : நமது வெப்சைட்டில் வைரஸ்கள் புகுந்துள்ளனவா என்று ஸ்கேன் செய்து பார்ப்பதற்கான வைரஸ் ஸ்கேனர் வசதி வழங்கப்படும்.

CDN : Content Delivery Network எனப்படும் CDN சர்வீஸ் இலவசமாகவே அமைத்துதரப்ப்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வெப்சைட்டுகள் எந்தவித தொய்வுமின்றி வேகமாக இயங்கும்.

எந்த மாதிரி வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் என்பதனை அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்...

உங்களால் இது முடியும் என்றால் கீழே கொடுத்துள்ளவாறு செய்து உங்கள் வேலையை இன்றே துவங்கலாம்.

Step 1 : இங்கே http://zolahost.com/my/register.php கிளிக் செய்து உங்களுக்கான கணக்கினை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

Step 2 : Register செய்தபிறகு "My Account" கிளிக் செய்து லாகின் செய்துகொள்ளவும்.


Step 3 : Login செய்தபிறகு மீண்டும் "My Account" கிளிக்செய்து "Affiliate Program" கிளிக் செய்து பிறகு "Activate Affiliate Account" கிளிக் செய்தவுடன் உங்களுக்கான Affiliate url மற்றும் Affiliate Bannerகளுக்கான கோட்கள் கிடைக்கும்.


Step 4 : உங்களிடம் வெப்சைட்டுகள் (www.****.com, ****.blogspot.com, ****.wordpress.com & all ) இருந்தால் அவற்றில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Affiliate Bannerகளை இணைத்துக்கொள்ளவும்.

உங்களிடம் ஏற்கனவே வெப்சைட் இல்லைஎன்றால் Blogger.com அல்லது Wordpress.com சென்று உங்களுக்கென ஒரு வெப்சைட் இலவசமாக உருவாக்கிக்கொள்ளலாம்.

உங்களின் வெப்சைட்டிற்கு வருகை தருபவர்கள் உங்களின் Affiliate Banner மூலம் எங்களிடம் வேப்ஹோஸ்டிங் அல்லது வெப்டிசைனிங் சேவையை Register செய்தால் உங்கள் கணக்கில் கமிஷன் தொகை சேர்க்கப்பட்டுவிடும்.

உங்கள் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கும் வெப்சைட் தொடங்கவேண்டும் என்றால், உங்கள் வெப்சைட்டில் உள்ள Affiliate Banner கிளிக்செய்து Register செய்யச்சொல்லுங்கள்.

உங்கள் Affiliate Banner மூலம் எவ்வளவு பேர் வந்து பார்த்துள்ளனர், எவ்வளவுபேர் Register செய்துள்ளனர் போன்ற விவரங்கள் அனைத்தையும் புள்ளிவிவரமாக எங்களின் Affiliate பக்கத்திலேயே பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Tags : Online Earning Program In Tamil Nadu, Earn Money In Part Time, Make Money Part Time, How To Earn Money Online In Tamil Nadu
மேலும் படிக்க>>

ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டுமா இதை படிங்க முதல்ல...!

Labels:

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...!

இன்டர்நெட் உபயோகிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பொதுவாக இருக்கும் எண்ணம் ஒன்றே ஒன்றுதான். அது ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்.

வேலைக்கு செல்பவர்களுக்கும் படித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் தினமும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரங்களாவது ப்ரீ டைம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் ப்ரீடைமில் ஏதாவது பார்ட் டைம் ஜாப் செய்து சம்பாதிக்க நினைக்கின்றனர்

அவர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தவறான வழியினை தேர்ந்தெடுத்து பணத்தை பறிகொடுப்பது மட்டுமில்லாமல் இப்படி போய் ஏமாந்து விட்டோமே என்று மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

அனைவரும் ஏமாறும் விஷயங்கள் கீழ்காண்பவை போன்ற எளிதாக சம்பாதிக்கலாம் என்கிற கவர்ச்சிகரமான விளம்பரங்கள்தான்.

  1. காப்பி பேஸ்ட் செய்து மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம். 
  2. விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம்  மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம். 
  3. உங்களுக்கு வரும் ஈமெயில் பார்ப்பதன் மூலம்  மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம். 


ஒரு குழந்தைகூட எளிதில் செய்யும் இந்த மாதிரியான வேலைகளுக்கு  மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் தருகிறார்கள் என்றால் அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர்களிடம் பணம் கட்டி ஏமாறுகின்றனர்.

நீங்களே கொஞ்சம் பிராக்டிக்கல் ஆக யோசித்து பாருங்கள் நீங்கள் யாருக்காவது இந்த மாதிரியான வேலைகளை செய்வதற்கு  மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் தருவீர்களா...?

சம்பாதிக்க வேண்டும் என்றால் உழைத்துத்தான் ஆகவேண்டும். மிகவும் எளிமையான முறையில் சம்பாதிக்க வழி இருந்திருந்தால் அனைவரும் அந்த வழியினையே பாலோ பண்ணியிருப்பார்களே, எதற்க்காக கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்றனர்...?

மிகவும் எளிமையான முறையில் சம்பாதிக்கலாம் என்பன போன்ற கவர்சிகரமான விளம்பரங்களே உங்களை ஏமாற்றி அவர்கள் சம்பாதிக்கத்தான்.

ஆன்லைன் மூலம் நன்றாக சம்பாதிக்க மேண்டுமெனில் English Knowledge அல்லது Programming Knowledge நன்றாக இருந்தால் போதும்.

PHP, ASP, HTML மற்றும் CSS போன்றவற்றில் உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும்பட்சத்தில் Freelancer.com போன்ற வெப்சைட்டுகள் மூலமாகவோ அல்லது மற்றவர்களுக்கு வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பதின் மூலமாகவோ சம்பாதிக்கலாம்.

நன்றாக English Knowledge இருக்கும்பட்சத்தில் உங்களால் ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுத முடிந்தாலே போதும். ஆங்கிலத்தில் எழுதுவது ஒன்றே உங்களின் வேலை.

நமக்கென்று சொந்தமாக ஒரு வெப்சைட்டை உருவாக்கிக்கொண்டு அதில் மற்றவர்களுக்கு பயன்டும்வகையிலான தகவல்களை எழுதிவரவேண்டும். நமது வெப்சைட்டில் உள்ள தகவல்களை சமூக வலைத்தளங்களில் மற்றவர்கள் ஷேர் செய்வது மூலமாகவும் கூகிள் யாஹூ போன்ற சர்ச் என்ஜின்ஸ் மூலமாகவும் நமது வேப்சைட்டினை பார்வையிட அதிகம் பேர் வருவர்.

உதாரணமாக சென்னையை பற்றிய தகவல்களை திரட்டி கொடுக்கும் வண்ணம் உங்களின் வேப்சைட்டினை உருவாக்கி அதில் சென்னையில் உள்ள அனைத்து இடங்களை பற்றிய தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள் என்றால், புதிதாக சென்னைக்கு வருபவர்களுக்கு  மற்றும் அங்கு ஏற்கனவே உள்ளவர்களுக்கும் சென்னையில் உள்ள அவர்களுக்கு தெரியாத இடங்களை பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் அறிந்துகொள்ள உங்களின் வெப்சைட் ஒரு பாலமாக அமையும். அவர்களுக்கு உங்களது வெப்சைட் உதவிகரமாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் நண்பர்களிடமும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உங்களது வெப்சைட் பற்றி தெரியப்படுத்துவர்.

இதன் மூலம் நாம் எப்படிசம்பாதிப்பது என்று கேட்கிறீர்களா...?

உங்களது வெப்சைட்டில் கூகிள் அட்சென்ஸ் விளம்பரங்களை வாங்கி போட்டுக்கொள்ளலாம். உங்களது வெப்சைட்டிற்கு வரும் பார்வையாளர்கள் அங்கு நீங்கள் கொடுத்துள்ள கூகிளின் விளம்பரங்களை பார்ப்பதற்கு கூகிளிலிருந்து பணம் கொடுப்பார்கள்.

உங்களது வெப்சைட் நன்றாக பிரபலம் ஆகும்போது கூகிளின் விளம்பரம் மட்டுமில்லாது மற்ற நிறுவங்களின் விளம்பரங்களும் உங்களது வேப்சைட்டினை தேடிவரும். நம்மை தேடிவரும் விளம்பரங்களின் மூலம் வரும் வருமானம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இதற்க்கு எவ்வளவு செலவாகும்...?

உங்களுக்கென ஒரு வெப்சைட் ஆரம்பிப்பதற்கு மட்டும் Rs.2000 செலவாகும். மற்றபடி வேறு எந்த செலவும் கிடையாது.

எங்கு எப்படி எப்போது ஆரம்பிக்கலாம்...?

Rs.2000 என்பது ஒன்றும் பெரிய தகை கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே....

இருந்தாலும் கஷ்டப்பட்டு வேலை செய்து வீணாக போய்விடக்கொடாது என்பதற்காக வேலையை தொடங்குவதற்கு முன்பாக உங்களது ஆங்கில அறிவை சரிபார்த்துகொள்வது அவசியமாகிறது.

உங்களால் ஆங்கிலத்தில் சரியாக எழுத முடியுமா என்பதை சர்பார்க்க நான் உங்களுக்கு தமிழில் உள்ள இரண்டு கட்டுரைகளை அனுப்புவேன். நீங்கள் அவை இரண்டையும் சரியாக ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுதி அனுப்பிவிட்டீர்கள் என்றால் அடுத்த நாளே வேலையை துவங்கலாம்.

முக்கிய குறிப்பு :
மொழிமாற்றம் செய்ய Google Translate போற்றவற்றை உபயோக்கிக்க கூடாது. நீங்களே சொந்தமாக எழுத வேண்டும்.

இந்த வேலையில் இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழுள்ளவாறு எனக்கு ஈமெயில் அனுப்பவும்.

I want to join in Google Adsense online earning program. Kindly send me the articles for translate to English.

எனக்கு ஈமெயில் கிடைத்த இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு தமிழில் உள்ள இரண்டு கட்டுரைகளை அனுப்பி வைப்பேன். நீங்கள் அவை இரண்டையும் சரியாக ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுதி அனுப்பிவிட்டீர்கள் என்றால் அடுத்த நாளே வேலையை துவங்கலாம்.

எனது ஈமெயில் : p.sathikdm@gmail.com

Tags : The best home based part time online jobs in Tamil Nadu, available home based online part time jobs in Tamil Nadu, How to join online jobs in Tamil Nadu, How to work part time jobs in Tamil Nadu
மேலும் படிக்க>>