ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் மக்கள் கையில் மட்டுமே..!



பலர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சொல்லுவதை ஒரு ஸ்டைலாகவே மாற்றிவிட்டனர்.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சியை சார்ந்தே உள்ளது. அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் பணக்கார நாடுகளாக உள்ளன என்றால் அது அவர்களது நாட்டில் உள்ள மக்கள் புதிதாக தொழிலை துவங்கி வெற்றிகரமாக நடத்துகின்றனர்.

Microsoft, Google, Apple மற்றும் Facebook போன்ற அனைத்து நிறுவனங்களுமே சாதாரண மனிதர்களால் தொடங்கப்பட்டவையே என்பது யாவரும் அறிந்ததே...!

சீனா முன்னேற காரணம் உலகுக்கே அவர்கள்தான் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பனியன் உற்பத்தி போன்ற மற்ற துறைகளிலும் அங்குள்ள நிறுவனங்கள் உலகளவில் கொடிகட்டிப்பறக்கின்றன.

காங்கிரசாக இருந்தாலும் பாஜக வாக இருந்தாலும் அரசாங்கத்தால் திட்டங்களை மட்டுமே அறிவிக்கமுடியும். அதை நல்லவழியில் பயன்படுத்திக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. அரசாங்கம் தொழில் செய்ய கொடுக்கும் கடன் தொகையினை பெற்றுக்கொண்டபிறகு ஒருவரது முதல் யோசனையே அதை கட்டாமல் தப்பிப்பது என்பதாகத்தான் உள்ளது. என்ன தொழில் ஆரம்பிக்கலாம் அதை எப்படி முன்னுக்கு கொண்டுவரலாம் என்பதெல்லாம் பற்றி யோசிப்பதே இல்லை.

ஒருவர் ஒரு தொழில் ஆரம்பித்து அவருக்கு நல்ல இலாபம் வந்தால் உடனே டஜன் கணக்கில் அனைவரும் அதே தொழிலை ஆரம்பித்து ஈ ஓட்டிக்கொண்டு இருந்தால் எப்படி முன்னேற முடியும்.


உதாரணாமாக தமிழ்நாட்டில் மட்டும் 550 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் கல்லூரிகள் மட்டும் இவ்வளவு என்றால் மற்ற கல்லூரிகளையும் சேர்த்து எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பாருங்கள். தேவைக்கு அதிகமாக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்ட காரணத்தினால்தான் பல கல்லூரிகள் மாணவர்கள் இன்றி கற்றுவாங்கிக்கொண்டு உள்ளன.

எனக்கு தெரிந்தே பலர் நோகாமல் நோம்பி கும்பிட அதாவது உழைக்காமல் பணம் சம்பாதிக்க மட்டுமே வழிகளை தேடிக்கொண்டு உள்ளனர்.


இதற்கும் பல உதாரணங்கள் என்னிடம் உள்ளன. குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற விளம்பரங்களை நம்பி MLM, ஈமு கோழி போன்றவற்றிலும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு புதிதாக துவங்கப்பட்ட நிதிநிறுவனங்கள் போன்றவற்றிலும் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமான எவ்வளவோபேர் பற்றி நீங்களும் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்காகவும் கிரிக்கெட் வீரர்களுக்காகவும் தெருக்கோடிகளில் ஆட்டம் போட்டுக்கொண்டும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் இருக்கும் நாம் எப்போதாவது நாமும் அவர்களைப்போல் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா...?

நம்மைப்போல் பலர் சேர்ந்ததுதானே நாடு...?


மக்கள் இல்லாமல் நாடு என்ற ஒன்று கிடையாதே...!

மக்களாகிய நாம் முன்னேறினாலே போதும், நாடு தானாக முன்னேறிவிடும்...!

Post a Comment

0 Comments