அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிக்க அருமையான வழி!

நீங்கள் ஆன்லைனில் வேலை தேடுவவராக இருந்தால் கண்டிப்பா அப்ளியேட் மார்க்கெட்டிங் என்ற வார்த்தையை அறிந்திருப்பீர்கள். பலர் அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிக்க பயிற்சி தருகிறோம் என்கிற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் மக்களுக்கு ஒரு சரியான பாதையை காட்டுவதில்லை. எதோ ஒன்றை ஏனோதானோவென்று சொல்லிகொடுத்துவிட்டு பணத்தை பிடுங்கிக்கொள்கின்றனர். இதனால் பலர் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் ஏமாத்து வேலை என்று நினைத்து விடுகின்றனர்.

அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பது உலகம் முழுவதும் பலரால் செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு நல்ல வருமானத்தை வழங்கியும் வருகிறது. இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் நீங்களும் அப்ளியேட் மார்க்கெட்டிங் இல் நன்றாக சம்பாதிக்கலாம். உங்களுக்கு கொஞ்சமாவது தானாக சிந்திக்கும் அறிவு இருந்தால் போதும் நீங்களும் நன்றாக சம்பாதிக்கலாம். பலர் உழைக்காமல் சம்பாதிக்க நினைப்பதே எளிதில் எமாற்றபடுவதற்கு முக்கிய காரணம். அடுத்தவரை ஏமாற்றினால் மட்டுமே உழைக்காமல் சாபாதிக்க முடியும் என்பது ஓர் குழந்தைக்கு கூட தெரியும். அதனால் நீங்கள் முதலில் உங்கள் மேல் நம்பிக்கை வைத்தால் மட்டுமே ஆன்லைனில் நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதே உண்மை.

அப்ளியேட் மார்க்கெட்டிங் இல் நீங்கள் சம்பாதிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் நாங்கள் உங்களுக்கு உருவாக்கி கொடுத்துவிடுவோம். நாங்கள் செய்து கொடுக்கும் செட்டிங்க்ஸ் மூலம் அப்ளியேட் மார்க்கெட்டிங் மட்டுமல்லாது வேறு சில வழிகளிலும் கொஞ்சம் வருமானம் பார்க்க இயலும். உங்களுக்கு திறமை இருந்தால் போதும் எங்களால் உங்களை நிச்சையம் சம்பாதிக்க வைக்க முடியும்.

பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. இது என்னடா இது இதுக்கு பத்தாயிரம் ரூபாயா என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. நீங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலீடு போட்டுத்தானே ஆக வேண்டும்? அதேபோல்தான் இதுவும். நீங்கள் ஒரு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டுமானால் பணம் கட்டித்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் அந்த தொழிலை செய்வதற்கான அனைத்தையும் நாங்களே அமைத்தும் தருகின்றோம்.

நீங்கள் செலுத்தப்போகும் இந்த பத்தாயிரம் ரூபாய் பயிற்சிக்கான கட்டணம் மட்டுமல்ல, நீங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வதற்கான உபகரணங்களுக்கும் சேர்த்துத்தான். கண்டிப்பாக என்னால் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.

இப்படியெல்லாம் சொன்னத நம்பி நானும் ஒரு பத்தாயிரம் கட்டி ஏமாந்ததுதான் மிச்சம்ங்க. ஆனால் எங்கும் பணம்கட்டாமல் சொந்தாமாக அப்ளியேட் மார்கெட்டில் இறந்குனவங்க எல்லாம் நல்லா சம்பாதிக்குறாங்க போங்க.

பயிற்சி அளிப்பவனை குத்தம் சொல்வதும் தவறுதான். ஏனென்றால் பயிற்சிக்குப்பின் அவனே அனைத்தையும் செய்து கொடுப்பான் என்று இருக்காமல் நாம் முயற்சிசெய்தால் மட்டுமே இந்த துறையில் சாதிக்கமுடியும்.

Affiliate Marketing Training In Tamil Nadu, Affiliate Marketing Tips In Tamil Nadu, Affiliate Marketing In Tamil, Tamil Nadu Affiliate Marketing Jobs, Affiliate Marketing Job Training Class, Erode, Tirupur, Coimbatore, Covai, Bangalore, Chennai, Dindigul, Palani, Trichy

Post a Comment

0 Comments