உங்கள் பிளாக்கருக்கும் எளிய மற்றும் குறுகிய சைட் நேம்

அதிகம் எழுத நேரம் இல்லாத காரணத்தால் குறைவாக எழுதி முடிக்கின்றேன்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் போனில் தொடர்புகொள்ளவும்.அல்லது பின்னூட்டமாக இடவும்.

உங்களாலும் இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு .காம் போல் ஒரு குறுகிய பெயரை உபயோகிக்க முடியும்.அதுவும் இலவசமாக ....!என்ன நம்பமுடியவில்லையா?நான் கீழே விளக்கியுள்ளவாறு பண்ணுங்கள் உங்களுக்கே புரியும்.படங்கள் தெளிவாக தெரியவில்லை என்றால் படங்களின் மேலே கிளிக் செய்தால் தெளிவாக தெரியும்.

முதலில் இங்கே கிளிக் செய்தால் கீழே கொடுத்துள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் திறக்கும்.அதில் நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் நீங்கள் உங்கள் பிளாக்கிற்கு விட விரும்பும் பெயரினை அடித்து கிடைக்குமா என்று பார்த்து விட்டு ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.



நீங்கள் முதலியே உங்க சைட் நேம் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியிருந்தால்.சைட் நேம் ஒரு லைட் மஞ்சள் நிற பெட்டியில் தெரியும்.இந்த படத்தில் நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் உள்ள C NAME கிளிக் செய்து கொள்ளுங்கள்.


இப்போது அங்கு HOST என்று உள்ள இடத்தில் WWW உடன் சேர்த்து தங்களின் சைட் நேம் நான் படத்தில் கொடுத்துள்ளவாறு கொடுக்கவும்.அதன்பின் உள்ளவற்றில் என்ன கொடுக்க வேண்டும் என்பதையும் நான் கொடுத்துள்ளேன்.
ITL = 1D ; TYPE = C NAME ; VALUE = ghs.google.com
அனைத்தையும் நிரப்பிவிட்டு செட்டப் பட்டன் கிளிக் செய்து விடுங்கள்.இத்துடன் இங்கு செய்யவேண்டிய வேலைகள் முடிந்துவிட்டன.இனி பிளாக்கரில் என்ன செய்யவேண்டும் என்பதை இப்போது விளக்குகிறேன்.


முதலில் உங்களின் பிளாக்கர் அகௌண்டில் லாகின் செய்து கொள்ளுங்கள்.பிறகு எந்த பிளாக்கருக்கு நாம் முன்னாள் உருவாக்கிய சைட் நேம் கொடுக்க விரும்புகிறீர்களோ அதான் கீழ் உள்ள SETTINGS கிளிக் பண்ணுங்கள்.


செட்டிங்க்ஸ் பக்கம் வந்தததும் PUBLISHING கிளிக் பண்ணவும்.


பப்ளிஷிங் பக்கம் வந்ததும் அங்குள்ள பெட்டியில் சைட் நேம் இட்டால் வராது.எனவே SWITCH TO ADVANCED SETTINGS கிளிக் பண்ணவும்.


இனி நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் சைட் நேம் கொடுத்து கீழுள்ள கேப்ட்சா எழுத்துக்களை சரியாக அடித்து சப்மிட் செய்து விட்டு பாருங்கள்.இப்போது நீங்கள் சைட் நேம் கொடுத்த இடத்தின் கீழே டிக் அடிப்பது போல் இருக்கும் .இது எதற்கு என்றால் இப்பொழுது நாம் WWW உடன் தான் கொடுத்துள்ளோம்.WWW இல்லாமல் கொடுத்தாலும் இந்த வேப்சைட்டிற்கே வரவேண்டும் என்றால் டிக் செய்து இன்னொரு முறை சப்மிட் கொடுத்துகொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் புதிய குறுகிய சைட் நேம் உங்களின் பிளாக்கில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.ஒருசிலருக்கு மட்டும் இது வேலை செய்ய ஒருநாள் எடுத்துக்கொள்ளும்.


Related Keywords: Part Time Online Jobs In Mamallapuram,Online home Based Jobs In Mamallapuram,Mamallapuram Jobs,data Entry Jobs In Mamallapuram,City,Outer,Job Provider,Internet Jobs In Mamallapuram,Computer Jobs In Mamallapuram,Home Based Part time,Online Part time,Free jobs,Home Based Online,Tamilnadu,Tamil,How To,Real Paying,true,great,Best,Mamallapuram,Mamallaburam,Mamalapuram

Post a Comment

4 Comments

  1. Hai Frient
    eannoda blogla eappadi filea(softwares,songs) add pannurathu
    pls tell

    ReplyDelete
  2. நண்பரே...

    பிளாக்கில் இமேஜ் மட்டுமே அப்லோட் பண்ண முடியும்.தங்கள் வேண்டுமென்றால் பைல் ஷேரின்க் சைட்டுகளில் அப்லோட் செய்து அதான் லிங்க் எடுத்து உங்கள் வெப்சைட்டில் கொடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. வணக்கம் நண்பா,
    நான் மிக அதிக நாள்களாக வெப்சைட் தொடங்க திட்டமிட்டிருந்தேன்.(பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டும்). என்னுடைய வலைப்பூவைத் தமிழில் வெளியிடவே விரும்புகிறேன்.

    ஆனால், அப்படி வெளியிடுவதாக இருந்தால் நான் copy, paste செய்யும் கட்டாயத்தில் தான் உள்ளேன். ஏனெனில் மக்களை கவரும் வகையில் எதைப் பற்றி வலைப் பூவில் எழுதுவது என்று தெரியவில்லை.


    நான் முதலில் FREE DOWNLOADS(அனைத்தும்) தரும் வலைப் பூவை டிசைன் செய்யும் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் அதற்கு நேரம் அதிகமானதால் அதை விட்டுவிட்டேன்.


    தமிழில் HTML, PHOTOSHOP,COMPUTER TIPS இது போன்றவற்றை கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் ஏற்கனவே நிறைய பேர் அந்த வேலையைச் செய்து முடித்து நிறைய PAGE VIEWERS-யை பெற்றுள்ளார்கள்.


    சமையல்,அழகு குறிப்புகள், சினிமா செய்திகள் என அந்தப் பக்கம் செல்லலாம் என நினைத்தால் அங்கும் எனக்கு போட்டிகள் சரமாரியாக உள்ளது.

    என்ன தான் பணத்திற்காக யோசித்து கொண்டே பிளாக் தொடங்க முடியாமல் இருந்தாலும், நான் கண்டிப்பாக தொழிற் ரீதியாக இல்லாமல் படிப்பிற்காக இந்த வருட இறுதிக்குள் ஒரு வெப்சைட்டை என் கல்லூரிக்காக நான் செய்து கொடுத்தே ஆக வேண்டும்.


    ஆனால், என்னுடைய புரோஜ்ட்டிற்கு நிறைய பணம் தேவைப்படுவதால் தான் நான் நல்ல பணம் தரும் பிளாக் தொடங்க திட்டமிட்டேன். ஆனால், எந்த கருவைக் கொண்டு என்னுடைய வலைப் பூவைப் பிரபலப்படுத்துவது எப்படி என்றும், எப்படி பணம் புரட்டுவது என்றும் தெரியவில்லை.

    எனக்கு காப்பி செய்யும் எண்ணம் இல்லை....


    தயவுசெய்து உதவவும்.....

    ReplyDelete
  4. உங்கள் பதிவை படித்தேன். ரொம்ப நல்லவரா இருக்கீங்க. எத்தனை பேர் இருந்தால் என்ன? போட்டோசாப் எடுத்து செய்யுங்க. லட்சம் பேர் இருந்தாலும் உங்களின் கற்றுத்தரும் திறன் உங்களுக்கு வியுவர்ஸ் கொண்டுவந்து சேர்க்கும். தகுதி உங்களிடத்தில் உள்ளது. எத்தனைபேர் எதை செய்தாலும் உங்களின் திறமை உங்கள் சைட்டை மேலே கொண்டுவரும்.

    ReplyDelete